திரைச்செய்திகள்
Typography

கையிலிருந்த ஒரே படமான ‘சங்கமித்ரா’வையும் கை கழுவிய ஸ்ருதிஹாசனுக்கு இப்போதுதான் ஷாக்.

அவர் நம்பியிருந்த எந்த தமிழ் படங்களும் அவர் பக்கம் வரவில்லை.

சொல்லி வைத்த மாதிரி தெலுங்கு, இந்தி படங்களும் காலை வாரிவிட்டுவிட்டன. இருட்டுல எருமை மாட்டை தேடிய கதையாக தட்டுத் தடுமாறி வரும் அவர், முழு நேர இசையமைப்பாளராக கூட மாறிவிட்டால் என்ன என்று யோசித்திருக்கிறாராம்.

கோடம்பாக்கத்திலிருக்கும் தனது செயல்வீரர்களிடம், ‘ஸ்ருதி இசையமைக்க தயார்.

விருப்பமுள்ளவர்கள் அணுகவும்’ என்ற போஸ்டரை தட்டிவிட சொல்லிவிட சொல்லியிருக்கிறாராம். வாட்ஸ் ஆப்-ல் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

Most Read