திரைச்செய்திகள்

விஷால்னா என்ன கிள்ளுக்கீரைன்னு நினைச்சிங்களா, விஷால்டா... என்று மார்தட்டுவார்கள் போலிருக்கிறது.

தமிழ்சினிமாவுக்கு நல்லது செய்தே ஆக வேண்டும் என்று வெறி பிடித்தார் போல பதவிக்கு வந்த விஷால், ராப் பகலாக அதே வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலுக்கு முன் அவரை கடுமையாக விமர்சித்த சிலரே கூட, ‘பையன் பரவால்லப்பா.

சங்க நன்மை ஒண்ணே போதும்னு சுத்தி சுத்தி வர்றாப்ல’ என்று சர்டிபிகேட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படியிருந்தும் விஷால் எதிர்ப்பு ரத்தத்தை உடம்பு முழுக்க ஏற்றிக் கொண்டு திரியும் சிலர் சங்கடத்தை சைடு வழியா கொடுக்கலாம் என்று நினைத்து வரும்போது, அங்குதான் செக் வைத்தார் அவர்.

சங்க அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து அட்டகாசம் பண்ணும் நபர்களை ஃபில்டர் பண்ணுவதற்காகவே ஜிம் பாய்ஸ் இறக்கப்பட்டுவிட்டார்கள்.

எப்போதெல்லாம் விஷால் சங்கத்திலிருக்கிறாரோ, அப்போதெல்லாம் இந்த பாதுகாப்பு இருக்கிறது.

சத்தம்போட்டு பேசுனாலே, சட்டைய பிடிப்பானுங்களோன்னு இருக்கு என்கிறார்களாம் எதிர்கோஷ்டியினர். சிறப்பு...

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது