திரைச்செய்திகள்

நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் நடுவில் விரிசல் என்று ஊர் உலகமெல்லாம் ஒப்பாரி வைத்தாலும், உள்ளுக்குள் இன்னும் காதல் பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்ற தகவலை சில வாரங்களுக்கு முன் சொன்னோமல்லவா?

அந்த காதலுக்கு மேலும் ஒரு சாட்சிதான் இது. (என்னது...அதுக்குள்ளயா, ஊரு தப்பா பேசுமேய்யா... என்று பதறுகிறவர்களுக்கு, அடச்சே. அது இல்லீங்) இந்த சாட்சி வேறொன்று.

சில தினங்களுக்கு முன் சென்னையில் ஒரு ரிஜிஸ்தர் ஆபிசுக்கு வந்திருந்தார் விக்கி. அவர் பெயரில் மிகப்பெரிய பிராப்பர்டி ஒன்றை பதிவு செய்து கொண்டார்.

விக்கிக்கு இருக்கிற மார்க்கெட் வீக்கத்துக்கு, இப்படியொரு பாக்யம் சாத்தியமில்லை. அப்படியென்றால்? அந்த பதிவும் பணமும் நயனின் அன்பன்றி வேறென்ன?