திரைச்செய்திகள்

அமெரிக்காவிலிருக்கிறார் சின்னக் ‘கொலை’வாணர் விவேக். (இவரு பேசுற டபுள் மீனிங் டயலாக்குக்கு கலைவாணர் பேரை ஏன் நாசப்படுத்தணும்?) விஷயம் இதுவல்ல.

அங்கிருந்தபடியே இருபெரும் விரிசல்காரர்களான தாணுவுக்கும் விஷாலுக்குமான இணைப்பை சாத்தியப்படுத்த ட்ரை பண்ணுகிறாராம்.

தமிழ்சினிமா இப்ப இருக்கிற நிலைமையில ரெண்டு பேரும் தனித்தனியாக இருக்குறது அவ்வளவு நல்லதில்ல. அதனால் ஒண்ணு சேருங்க.

சினிமா பிரச்சனைகளை உடைச்சு காலி பண்ணுங்க என்று கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்.

அதற்குள் அவங்க ரெண்டு பேரும் இணைந்து செயல்பட்டால் என்னாகும் என்று யூகித்து கருத்து விவாதத்தில் ஈடுபட்டுவிட்டார்கள் சங்கத்தின் முக்கிய தூண்கள்.

வேணாம்... குட்டைய குழப்பிடுவாரு. ப்ளீஸ்... என்று விஷாலிடம் கதறவே ஆரம்பித்துவிட்டார்களாம். ஆக மொத்தம்... அடங்குச்சு சத்தம்!