திரைச்செய்திகள்

ஆணானப்பட்ட ஷங்கருக்கே அனகோண்டா சூப் கொடுத்து அலறவிட்டுவிட்டார் வடிவேலு.

இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் பார்ட் 2 வுக்காக ஒரு சம்பளம் பேசி, ஷுட்டிங்குக்கு தேதியும் குறித்துவிட்டார்கள்.

செட் போடும் பணிகள் துவங்கி, பல கோடி ரூபாய் அதில் முடங்கிய பின், வடிவேலு தன் இன்னொரு கோர முகத்தை காண்பித்தார்.

பேசிய சம்பளத்திலிருந்து மேலும் இரண்டு கோடி எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று சொல்ல, தவித்துப் போனார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன்.

புலின்னு பேரு வச்சாலே இப்படி புடுங்கிட்டுதான் போகும் போல என்று முந்தைய சென்ட்டிமென்ட்டையும் சேர்த்துக்குழம்ப... ஷுட்டிங்கை அப்படியே கிடப்பில் போட்டார்கள்.

சுமார் மூன்று மாதங்கள் எதுவும் நடக்காமல் நேரம் மட்டும் நகர, வடிவேலு இறங்கி வந்தாராம்.

உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் என்று நடுவாப்ல(?) ஒரு சம்பளம் பேசி மீண்டும் செட்டுக்கு பெயின்ட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர்.