திரைச்செய்திகள்

ரஜினியின் சிஷ்யரான லாரன்சுக்கும் ரஜினிக்கும் நடுவில் ஒரு சின்ன பனிப்போர் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெளியே தலைவா... தெய்வமே... என்று முழங்கும் லாரு, தனிமையில் ரஜினியை வாரு வாரென்று வாரிக் கொண்டிருப்பதுதான் காரணம்.

இந்த நிலையில் லாரன்சின் அறக்கட்டளைக்கு அவ்வப்போது நன்கொடைகள் வழங்கி வந்த ரஜினி அதை சுத்தமாக ஸ்டாப் பண்ணிவிட்டாராம்.

அண்ணன் ஏன் இப்படி பண்ணினாருன்னே தெரியல... என்று அடித்தொண்டை கம்முகிறார் லாரா. தீதும் நன்றும் பிறர் தர வாரா!