திரைச்செய்திகள்

எமிஜாக்சன் பாடுதான் இப்போது படு திண்டாட்டம்.

எந்திரன் பார்ட் 2 வில் நடித்து முடித்துவிட்டார். அந்தப்படம் வெளிவருவதற்குள் அதே வேல்யூ கொண்ட இன்னொரு படத்தில் புக்காகிவிட வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது.

அதற்காக தன் தமிழ் தெலுங்கு மேனேஜர்களை கசக்கிப் பிழிகிறாராம். 2.0 படத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தை அப்படியே வேறு படங்களுக்கு கேட்டால், தலைகுப்புற விழுகிற அளவுக்கு மயக்கம் வரும்.

அதைவிட கொடுமை அந்தளவுக்கு வேல்யூ கொண்ட இன்னொரு படம் இப்போதைக்கு உடனே சாத்தியமில்லை.

அதனால் படம் வெளிவருகிற வரைக்கும் காத்திருப்பதுதானே முறை?

மேனேஜர்களை இம்சித்தால் அவர்கள் என்ன பண்ணுவார்களாம்?

கோடம்பாக்கத்தின் முட்டு சந்துகளில் கிடக்கும் ஈரக் கர்சீப்புகளில் எமியின் பேராசையும் ஒட்டிக்கொண்டிருப்பதை என்னவென்று விமர்சிக்க?