திரைச்செய்திகள்
Typography

ஒரு பாக்குப் பொட்டலாம் கொடுத்தால், நாக்குல இருக்கிற நரம்பை கூட வழிச்சு கொட்றளவுக்கு அப்பாவிதான் கஞ்சா கருப்பு.

பல வாரங்களாகவே இந்த பிக் பாஸ் மீது கடும் கடுப்பிலிருக்கும் நிருபர்களில் சிலர், கருப்பு வெளியேறியதும் நிகழ்ச்சி ரகசியங்களை ஒரேயடியாக அமுக்கிவிடும் நோக்கத்தில் அவரைத் தேடினால், மனுஷன் அகப்பட்டால்தானே?

கருப்புராஜாவை வெளியே விட்டால் கண்டமேனிக்கு சேதாரம்தான் என்று புரிந்து வைத்திருக்கும் நிர்வாகம், இங்கேயே தங்கிக்கோ என்று தன் கஸ்டடியில் வைத்துவிட்டது அவரை.

குடும்பம் குட்டியோடு சேனல் கஸ்டடியில் இருக்கும் அவர், 100 நாள் கழித்துதான் சுதந்திரம் பெறுவார் என்கிறது சிக்னல்! வந்த பின்னாடி உளறுனாலும் வம்பில்லைன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு.


BLOG COMMENTS POWERED BY DISQUS