திரைச்செய்திகள்

சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தில் ஹீரோ ஜீவா பைட் போட்டதை விட, ஹீரோயின் ஸ்ரீதிவ்யா போட்ட பைட்டுக்குதான் செம கைத்தட்டல்.

விட்டால் ஆக்ஷன் படங்களின் ஆர்னால்டு(டி) என்று பாராட்டலாம்.

அந்தளவுக்கு தில்லும் திகிலுமாக இருந்தது அது.

படம் வந்த கொஞ்ச நாள் வரைக்கும் வாயை திறக்காத ஸ்ரீதிவ்யா, வந்த பாராட்டுகளுக்கு மட்டும் தேங்க்ஸ் போட்டுக் கொண்டேயிருந்தார்.

ஒரு கட்டத்தில் நெஞ்சை வருத்தியதோ என்னவோ? ‘அட... அந்த பைட்டுக்கு போக வேண்டிய பாராட்டெல்லாம் எனக்கு பொருந்தாது.

என்னோட டூப்புக்கு சொல்லுங்க’ என்று அந்த பைட்டில் தனக்காக டூப் போட்ட பைட்டரின் பெண் லுக் படத்தை வெளியிட்டுவிட்டார்.

அப்படியே ஸ்ரீ திவ்யாவை உரித்து வைத்திருக்கும் அந்த அண்ணன்தான், இவ்வளவு பாராட்டுக்கும் தகுதியான பைட் மன்னன்!

காலம் கடந்தாவது கர்ட்டனை நீக்கினாரே? சூப்பர்மா...