திரைச்செய்திகள்

ஹாட் ஆப் கன்ட்ரி மிஸ்டர் கமல்தான்! எந்த துறையில் லஞ்சம் இருக்குன்னு சொல்லணும்.

பொத்தாம் பொதுவா சொல்லக் கூடாது” என்று மினிஸ்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள்.

பொங்கி எழுந்துவிட்டார் கமல். ‘எல்லாரும் இந்த மெயில் ஐடிக்கு தங்கள் கொடுத்த லஞ்சம் பற்றி எழுதி அனுப்புங்க’ என்று அறிக்கை விட்டார்.

அதன் விளைவு மின்னஞ்சலாக போனதோ இல்லையோ? ஆனால் பேஸ்புக்கில் சிரித்தது.

சினிமா துறை சார்ந்த பலரும், அவரவர் முகப்பக்கங்களில் தங்கள் படத்திற்காக வரிவிலக்கு பெறுவதற்காக எவ்வளவு லஞ்சம் கொடுத்தோம் என்று எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படியொரு தாக்குதல் வரும் என்றே நினைத்திராதவர்கள் இனிமேல் என்ன மாதிரி ரீயாக்ட் பண்ணுவார்களோ தெரியாது.

ஆனால் விஷால் மட்டும், “அமைச்சர்கள் விஷயத்தில் கமல் சாரும் கொஞ்சம் யோசிச்சு பேசணும்” என்றார்.

யோசிக்காமல் பேசுகிறவரா கமல்?