திரைச்செய்திகள்
Typography

அஜீத் கண்ணசைவன்றி அணுவும் அசையக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ‘விவேகம்’ பட இயக்குனர் சிவா.

அஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் இவர்தான் என்றொரு தகவல் கசிய ஆரம்பித்துவிட்டது.

இந்த முறை மீண்டும் ஏ.எம்.ரத்னம் பேனருக்கே கால்ஷீட் தர தீர்மானித்திருக்கிறாராம் அஜீத்.

தொடர் வாய்ப்பால் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், ‘வேதாளம்’ படத்திலேயே தனது சம்பள பாக்கியை வாங்க முடியாமல் திணறியிருக்கிறார் சிவா.

மீண்டும் ஏ.எம்.ரத்னத்துடன் கோர்த்துவிடும் அஜீத்தே, தன் சம்பள விஷயத்தையும் பைசல் பண்ணினால் தேவலாம் என்பது அவரது ஆசை.

ஆனால், கை காட்டி விடுவது மட்டும்தான் தன் வேலை.

கரையேறுவது சம்பந்தப்பட்டவர்களின் வேலை என்று நினைப்பவராச்சே அஜீத்?

சில்லரையை சிதற விட்டு, மிச்சத்தைதான் அள்ளுவார் போல சிவா.

BLOG COMMENTS POWERED BY DISQUS