திரைச்செய்திகள்

‘வனமகன்’ சாயிஷா வீட்டுக்கு வரிசை கட்டும் இயக்குனர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

மார்க்கெட்டில் முன்னணியிலிருக்கும் ஹீரோ. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் படம் என்றால், சம்பளத்தை கேட்பதற்கு பதிலாக கொடுத்துவிட்டு நடிக்க தயாராக இருக்கிறாராம் இவர்.

இதென்னடா கொட்ற மழையில கெட்டித் தேன் இனிப்பு? யெஸ்... அடிப்படையில் பெரும் செல்வந்தியான இவர், நடிப்பை ஹாபியாகவே கருதுகிறாராம்.

வந்தோம்... டாப் டாப் ஹீரோக்களுடன் நடித்தோம் என்ற சந்தோஷம் வேண்டும் என்றால், இப்படி அப்படி செலவு செய்தால்தானே உண்டு? கோடிக்கணக்கில் பைனான்ஸ் செய்து கூட நடிக்க தயாராக இருக்கும் சாயிஷாவுக்குதான் இப்போதும் கோடம்பாக்கத்தில் ஹெவி டிமாண்ட்!

சூதானமா இல்லாட்டி சொத்தை கரைச்சுருவாய்ங்க... உஷார் பெண்ணே உஷார்.