திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் திரைக்கு வந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’, கூட்டத்தில் ஒரு படமாகிவிட்டது.

கலெக்ஷன் அவ்வளவு புவர் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.

கூட்டிக் கழித்து உண்டியலை குலுக்கினாலும், தயாரிப்பாளரின் ஷேர் 50 லட்சத்தை தாண்டாது என்கிறது ஒரு கொள்ளி விபரம்!

சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாதே என்கிற மையக்கருத்தோடும், மிடில் பெஞ்ச் மாணவனாலும் சாதிக்க முடியும் என்கிற போதனையோடும் வந்திருக்கிற கூட்டத்தில் ஒருத்தனை,

இனி தியேட்டரில் விட்டால் வேலைக்காகாது என்று முடிவெடுத்த இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் போட்டாவது துட்டு பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

ஒருசில பள்ளிகள் ஆர்வம் காட்டியதால் எங்கோ ஒரு ட்யூப் லைட் நாலு தடவை அணைந்து எரிய ஆரம்பித்திருக்கிறது.

சமயோஜிதம் வென்று, சம்பாத்யம் வந்தால் சரி.

Most Read