திரைச்செய்திகள்
Typography

தனுஷ் செய்த ஒரு காரியம், அவரை வாயார வாழ்த்த வைத்திருக்கிறது.

தஞ்சை மாவட்ட விவசாயிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லவா?

அவர்களின் குடும்பத்திற்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.

125 விவசாய குடும்பங்களை நேரில் வரவழைத்த தனுஷ், கிட்டதட்ட 80 லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறார்.

தேனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “இன்னும் சில மாதங்களில் விவசாயிகளின் நலன் காக்க வேறொரு பெரிய திட்டம் வைத்திருக்கிறேன்.

அதை செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த நலத்திட்ட உதவிகள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் செய்ததுதான் ஆச்சர்யம்.

முட்டை ஓடுகளை தானம் செய்துவிட்டு, கோழியையே அமுக்குகிற விளம்பர யுகத்தில் தனுஷின் தன்னடக்க உதவிக்கு ஒரு சல்யூட்மா...!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்