திரைச்செய்திகள்
Typography

தொலைக்காட்சிகளில் வரும் விவாத மேடைகள் கேட்பவருக்கு பயனளிக்கிறதோ இல்லையோ? பேசுகிறவர்களுக்கு ‘வாய் மேல்’ பலன்!

சிலருக்கு ரொக்கமாகவோ, சிலருக்கு சிபாரிசுகளின் போது ஆறாம் விரலாகவோ இருக்கிறது.

ஆனால் கரு.பழனியப்பனை பொருத்தவரை அது ஸ்பெஷல் வே! கடந்த சில வருடங்களாகவே பழனியப்பனின் சினிமா மார்க்கெட் ஜீரோவுக்கு மேலே. ஒன்றுக்கும் கீழே.

நிலைமை அப்படியிருக்க... ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்தான் கரு.பழனியப்பனின் வாதத் திறமையை கவனித்தாராம் அருள்நிதி.

பேசிக்காகவே திமுக ரத்தம் ஓடும் உடம்பு.

பழனியப்பனின் பேச்சால் ஒருமுறை சிலிர்த்து அடங்க, அடுத்த நிமிஷமே அவருக்கு போன் போட்டுவிட்டாராம்.

“நாம ஏன் சேர்ந்து ஒரு படம் பண்ணக்கூடாது?” என்று கலைஞரின் பேரன் கேட்க, அடுத்தடுத்த நாட்களிலேயே அமைந்தது வாய்ப்பு.

இரண்டு நெருப்புத் துண்டுகள் இணைந்தால் அந்த இடத்தில் சூடுக்கு கேட்க வேண்டுமா என்ன? இது முழுக்க முழுக்க அரசியல் சட்டையர் படமாக உருவாகப் போகிறது!

Most Read