திரைச்செய்திகள்
Typography

ஹன்சிகா நயன்தாரா ரேஞ்சுக்கு தனக்கு ஜோடி தேடி நடித்துக் கொண்டிருந்த உதயநிதி, ரெஜினா, மஞ்சிமா ரேஞ்சுக்கு இறங்கியது நல்லதா, கெட்டதா? அந்த பிரச்சனை நமக்கு எதற்கு?

ஆனால் மஞ்சிமா, உதயநிதி இணையும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் பிரஸ்மீட்டில் மஞ்சிமாவின் அழகை வாயில் ஜொள் ஒழுக வர்ணித்தார் காமெடி சூரி. ‘சண்டாளி... எப்படிதான் இம்புட்டு அழகா இருக்கோன்னு தெரியலையே?’ என்று அவர் வெள்ளந்தியாக சொன்னதை, அதே அப்பாவி கண்ணோட்டத்தோடு எடுத்துக் கொள்வது கஷ்டம்தான்.

‘ஷுட்டிங் ஸ்பாட்ல எங்க கூடதான் அரட்டையடிச்சுட்டு இருந்திச்சு. அப்ப தெரியல. இப்ப ஸ்கிரீன்ல பார்க்கும்போதுதான் இம்புட்டு அழகுன்னு தெரியுது’ என்றார் ஓப்பனாக. நல்லவேளை இந்த டிகாஷன் காபியின் நுரையை மேலே தெளித்துக் கொள்ள வேண்டிய சுச்சுவேஷன் மஞ்சிமாவுக்கு அமையவில்லை.

ஏன்? அவர் அங்கு வரவேயில்லை!

Most Read