திரைச்செய்திகள்
Typography

‘விசுவாசத்திற்கு இன்னொரு பெயர் என்றால் அது சூரிதான்...’ இப்படி வாயார புகழ்ந்து மனசார மகிழ்ந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

ஏன்? இவரால் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் சூரி. “அன்றிலிருந்து இன்று வரை அவரது விசுவாசம் மாறவேயில்லை அவர்கள் வீட்டில் எந்த நல்லது கெட்டது என்றாலும் முதல் மரியாதை எனக்குதான்.

அவரது குழந்தைக்கு பெயர் வைக்கிற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நான் ஷுட்டிங்கில் பயங்கர பிஸி. போகமுடியவில்லை. அதற்காக விட்டுவிடவில்லை சூரி. குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு எனக்குதான் போன் அடித்தார்.

குழந்தைக்கு நீங்கதான் பெயர் வைக்கணும். அதை அந்த குழந்தை காதுலேயும் சொல்லணும் என்று போனை குழந்தையின் காதில் வைத்துவிட்டார்.

இப்பவும் நான் நடிக்கணும் என்று அழைத்தால், ஒரு வரி கூட கதை கேட்காமல் சம்பளம் பேசாமல் ஸ்பாட்டுக்கு வந்து நிற்கிற மனுஷன்...” இப்படி சொல்லிக் கொண்டேயிருக்கிறார் சுசீந்திரன்.

சினிமாவில் இப்படியெல்லாம் இருப்பது அபூர்வம்தான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்