திரைச்செய்திகள்
Typography

சிம்புவுக்கு மணிரத்னம் படம் இருக்கிறது. இருந்தாலும் அது இன்னும் துவங்கப்படவில்லை அல்லவா?

குதிரை கிழடா இருந்தா குளம்பு வலுவா இருக்காதே? அதனால் இந்தப்படம் துவங்கி விளம்பரங்கள் வருகிற வரைக்கும் டவுட் மனநிலையிலேயே காலத்தை கடத்துகிறாராம் சிம்பு.

நடுவில் பிரபல தயாரிப்பாளர் தாணுவை சந்தித்த டி.ஆர், “நம்ம சிம்புவை வச்சு ஒரு படம் ஸ்டார்ட் பண்ணுங்க” என்ற உரிமையோடும் அன்போடும் கேட்டுக் கொள்ள... “அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சு.

ஆனால் சம்பளம் பற்றி வாயையே திறக்கக் கூடாது. நான் கொடுக்கறதுதான். சரின்னா சொல்லுங்க” என்றாராம் அவர்.

அந்த பேச்சு வார்த்தை அப்படியே இருக்கிறது. முன் வைக்கிற காலை இன்னும் இன்னும் முன் வைக்க வேண்டும் என்றால், டி.ஆர் யெஸ் சொல்ல வேண்டும்.

Most Read