திரைச்செய்திகள்
Typography

விஜய் ஆன்ட்டனி நடித்து விரைவில் திரைக்கு வரப்போகும் படம் அண்ணாதுரை. ‘ஊருக்கெல்லாம் அமாவாசை... உனக்கு மட்டும் பவுர்ணமியா’ என்று மிரட்டுவதுதானே சமீபத்திய சினிமாவின் தலையெழுத்து?

விஜய் ஆன்ட்டனியும் நிம்மதியாக இருந்துவிடக் கூடாது என்ற நினைப்பில் சிலர் கலவரத்திற்கு பிள்ளையார் சுழி போட ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதான் நள்ளிரவு போனாகவும், நாக்கூசும் வார்த்தைகளாகவும் வெடிக்கிறதாம் விஜய் ஆன்ட்டனி வீட்டுக்குள். விஷயம் இதுதான். படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஆன்ட்டனி. அதில் வரும் அண்ணாத்துரை கேரக்டர் குடிகாரனாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் அந்த வரும் இன்னொரு கேரக்டரில் ஒழுக்க சீலராக வருகிறாராம். ஏன் இப்படி அண்ணாவின் பெயரை கெடுக்கணும்? இதுதான் நம்ம ஹீரோவிடம் அகால நேரத்தில் கேட்கப்படுகிற கேள்வி. ‘பதில் சொல்ல நான் தயாரா இருக்கேன். ஆனால் அதுக்கு பகல்ல போன் பண்ணணும்’ என்கிறாராம் இவர். மனுஷனுக்கு என்னென்ன பிரச்சனை வருது பாருங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்