திரைச்செய்திகள்
Typography

சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்சி இயக்குகிற படம் ஒன்றை தயாரிக்கிறது ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம். முதலில் இந்தக் கதையில் நடிப்பதாக சொல்லப்பட்ட விஜய், இப்போது இதில் இல்லை. ஏன்?

“ஏற்கனவே நான் ஒரு சரித்திரப்படம் பண்ணி அது பிளாப். மறுபடியும் ஒரு புலி யை ட்ரை பண்ண எனக்கு யோசனையா இருக்கு. அதுமட்டுமில்ல. உங்களுக்கு கொடுக்கிற அத்தனை நாள் கால்ஷீட்டில் நான் மூணு படம் நடிச்சுடுவேன்” என்றாராம். இவ்வளவு தெளிவா சொல்லியாச்சு. அப்புறம் என்ன? இடத்தை காலி பண்ணிவிட்டார் சுந்தர்சி. தமிழில் விஜய்க்கு நிகரான பிசினஸ் உள்ள நடிகர்கள் என்றால் அஜீத் மற்றும் சூர்யாதான். அவர்களும் இதே காரணத்திற்காக இப்படத்தை மறுக்க, இவ்ளோ பெரிய பட்ஜெட்டுன்னு சொன்னாக் கூட மசிய மாட்டேங்குறாங்களே என்று கவலைப்பட்டு உடல் இளைக்க ஆரம்பித்திருக்கிறார் சுந்தர்சி. ஹ்ம்... யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ? 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்