சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், வெயிலின் கடுமை அதிகரித்திருப்பதாலும் தனித்திருந்தபடி நோயில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நடிகர் ராதாரவி கோடை குளிர் வாசஸ்தலமான கோத்தகிரி அருகே உள்ள தனது பங்களாவுக்கு குடும்பத்துடனும் மூன்று பணியாளர்களுடனும் ஓய்வெடுக்கப் போயிருந்தார்.

Read more: கோத்தகிரிக்கு தப்பியோடிய ராதாரவி : வில்லனைப்போல் துரத்திய போலீஸ் ?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அம்மா எப்படி இருப்பார் என்று பலருக்கும் தெரியாது. தனது அம்மாவின் போட்டோவை நயன்தாரா பொதுவெளியில் இதுவரை வெளியிட்டதும் இல்லை. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு முதல்முறையாக தனது அம்மாவுக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் குழந்தையாக தனது அம்மாவின் கரங்களில் இருக்கும் புகைப்படத்தையும் நயன்தாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Read more: அம்மாவுக்கு நயன்தாரா அம்மாவுக்கு வாழ்த்து !

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

Read more: காவல் அதிகாரிகளிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி

மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது.

Read more: மோகன்லாலுடன் பழகிய நாட்களை மறக்க முடியாது ! - கோமல் சர்மா

ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருந்து வருகிறார் திரிஷா. அவரை கௌதம்மேனன் இயக்கியிருக்கிறார். ஆனால் இது முழு நீள திரைப்படத்துக்காக அல்ல. ஒரு சோதனைக் குறும்படத்துக்காக. ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற அந்தக் குறும்படத்துக்கு தலைப்பு சூட்டியிருக்கும் கௌதம் மேனன், அதில் ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு ஆகிய பங்களிப்புகளை த்ரிஷா வழங்கும்படி செய்திருக்கிறார்.

Read more: கௌதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா !

திரையுலக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று தயாரிப்பாளர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த குழுவில் தனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தேனியில் இருக்கும் தன்னிடம் இது குறித்து யாரும் கலந்து பேசாவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more: என்னைக் கேட்காமல் என் பெயரை எப்படிச் சேர்க்கலாம் ? : பாரதிராஜா கண்டனம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு" "ஒரு படைப்பின் வடிவத்தை விட அது தரும் உணர்வு பெரியது" என்று சொல்வார்கள். அந்த வகையில் "யுவர்ஸ் சேம்ஃபுல்லி" என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் இந்தப்புதிய படத்தை இயக்கிவருகிறார்.

Read more: இது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பிளான் - பி’

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.