கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு கபீர் கான் இயக்கத்தில் உருவாகும் '83' திரைப்படம், 1983ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது. உலகக் கோப்பைக்காண பயணத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களையும் உண்மைச் சம்பவங்களையும் விவரிக்கிறது இப்படம்.

Read more: 1983-ன் ஆண்டின் உலகக் கோப்பையை மறக்க முடியுமா ?

மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள்... கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களை சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும் பெருமையாக கருதுகிறேன்.

Read more: கேரள முதல்வருக்கு ராகவா லாரன்ஸின் அவசர வேண்டுகோள் !

தரமான கதைகள், மசாலா மனக்கும் கதைகள் என இரண்டு வகைக் கதைகளையும் தேர்வு செய்து கதாநாயகனாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. அதேபோல மாஸ் கதாநாயகர்களின் படங்களில் நல்ல கதை என்றால் அவற்றிலும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துவருகிறார்.

Read more: கமல் படத்தில் விஜய்சேதுபதி !

உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்).

Read more: நிஜத்திலும் ஹீரோ விஜய் ஆண்டனி !

பாகுபலி திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் , தெலுங்கில் முன்னணி இயக்குனர் எனும் சிறப்புக்களுக்குச் சொந்தக்காரர் இயக்குனர் ராஜமவுலி. அவர் இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதக் கதையினைப் படமாக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Read more: பாகுபலி ராஜமவுலி பாரதப் போரைப் படமாக்க விருப்பம் !

தமிழில் சூப்பர் டூப்பர் வெற்றிபெறும் பல படங்களை தெலுங்கில் மறு ஆக்கம் செய்து நடித்திருக்கிறார் சிரஞ்சீவி. அதேபோல தமிழ் நடிகர், நடிகைகளையும் தனது படங்களில் நடிக்க வைப்பதில் தொடக்கம் முதலே அவர் ஈடுபாடு காட்டி வருபவர்.

Read more: அஜித் இடத்தில் சிரஞ்சீவி !

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் படங்கள் உட்பட அனைத்து படப்பிடிப்புகளுக்கும் நிறுத்தப்பட்டன. நடிகர் அஜித், ஹைதராபாத்தில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் ஊரடங்கு தொடங்கும் முதல்நாள் இரவு 10 மணி வரை நடித்துவிட்டு, அங்கிருந்து தனது இறக்குமதி மோட்டார் சைக்கிளில் தனது உதவியாளர்கள் பின்தொடர சென்னை வந்து சேர்ந்தார்.

Read more: கேரளாவைப் போல் தமிழ் சினிமாவும் மீளுமா ?

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.