கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது.

Read more: 48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் : கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் செய்யும் மாயம் !

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம்.

Read more: ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் கூட்டணி !

ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ’முந்தானை முடிச்சு’. சினிமாக்களில்‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ என்று ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு.

Read more: முந்தானை முடிச்சு ரீமேக்கில் இவர்தான் ஹீரோ !

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் பெரும்பான்மையான படங்களுக்கு இசை அமைத்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி. அதற்குக் காரணம், கீரவாணி ராஜமௌலியின் உறவினர் என்ற உண்மையைத் தாண்டி, அவரை தெலுங்கு சினிமாவின் இளையராஜா என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இசையமைத்து வருபவர்.

Read more: ‘பாகுபலி’ இசையமைப்பாளரின் அதிரடி அறிவிப்பு !

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்ட பொருளாதாரம், அதன் வீழ்ச்சி என்பன தரக் கூடிய தாக்கம் என்பவற்றுடன், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சில நன்மையாக அமையினும், பல மாற்றங்கள் மிகுந்த சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

Read more: இணையத்தில் வெளியாகவுள்ள படங்களும், இனி வரப்போகும் சீர்கேடுகளும் ..?

'ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜயசேதுபதி நடித்த 'கருப்பன்' போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்'நான்தான் சிவா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Read more: ரேணிகுண்டா இயக்குநரின் புதிய முயற்சி !

சிலரை நேரில் பார்த்தாலோ, பேசினாலோ ; இவர் தேறமாட்டார்’ என்று நினைக்க தோன்றும். ஆனால் அவர்கள் செய்து முடித்த வேலைகளைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.

Read more: செல்வராகவன் தனக்குத் தானே எழுதிக் கொண்ட கடிதம் !

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.