இந்தியா

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று துண்டித்துள்ளது. எதிர்க்கட்சிகள், சில இயக்கங்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது விஷமிகளும், சில கட்சி தலைவர்களும் மக்களை திசை திருப்பினார்கள். 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது; கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும்.” என்றுள்ளார்.