கிரிக்கெட் கையில் எடுக்கும் மிஷ்கின்
- Saturday, 08 September 2012 10:05

என்னதான் முதல் மூன்று நாட்களில் முகமுடியின் வசூல் 2.5 கோடி என்று யூ.டி.வி அளந்துவிட்டாலும் அதை யாரும் நம்பத்தயாராக இல்லை.
காரணம் தமிழ்சினிமாவின் முதல் சூப்பர்மேன் படம் என்று சொல்லிவிட்டு ரசிகர்களை ஒரேயடியாக ஏமாற்றியதுதான் என்கிறார்கள். தற்போது முகமுடி ஓடும் தியேட்டர்களில் 30 முதல் 50 மட்டுமே படம் பார்த்து வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் மொத்த பெட்டிகளும் சென்னைக்கு திரும்பிவிடும் என்ற நிலையே உள்ளது.
அரக்கோணம் திரைப்பட பிரஸ் மீட் வீடியோ இங்கேலவ் பண்ணலாமா? வேணாமா?
போடா போடி டீஸர் வீடியோ
மதில்மேல் பூனை ஆடியோ ரிலீஸ்
இதற்கிடையில் முகமூடி படத்தினைப் பற்றி கலவையான விமர்சனம் வெளிவந்து இருப்பதை ஏற்றுக்கொள்ளாத மிஷ்கின், மீடியா ஒட்டுமொத்தமாக தன்னை பலிவாங்குவதாக சொல்லி வருகிறாராம் மிஷ்கின்!
ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன் நடித்த முகமூடி படத்தினை மிஷ்கின் இயக்க சுமார் 20 கோடி பட்ஜெட்டில் யு.டிவி நிறுவனம் தயாரித்தது. படத்தினை தயாரிக்கும் போதே மிஷ்கின் - யு.டிவி நிறுவனம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இடையே மிஷ்கின் தனது LONE WOLF தயாரிப்பு நிறுவனத்தையும் படத்தின் தயாரிப்போடு இணைத்துக் கொண்டார். படம் வெளியான போது படத்தின் எந்த விதத்திலும் விளம்பரப்படுத்த மிஷ்கின் ஒத்துழைக்க வில்லை. இதனால் கடும் கோபத்தில் இருக்கிறது நிறுவனம்.
போடா போடி திரைப்பட படங்கள்
துள்ளி எழுந்தது காதல் திரைப்பட படங்கள்
பீட்சா ஆடியோ வெளியீடு படங்கள்
அதுமட்டுமன்றி பத்திரிகையாளர் சந்திப்பு, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி நிகழ்ச்சி என எதிலும் மிஷ்கின் பங்கேறவில்லை. காரணம் கேட்டால் தனது நண்பனுக்கு விபத்து என்று கூறினாராம். 20 கோடி பட்ஜெட்டில் படத்தினை தயாரித்து இருக்கிறோம். ஒரு 2 மணி நேரம் பேட்டி கொடுத்தால் என்ன ஆகப் போகிறது என்று திட்டி தீர்த்தாம் தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் கதையின் கருவாக கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுத்து இருக்கிறார். முகமூடியில் குங்ஃபூ கலையில் தோற்ற மிஷ்கின், கிரிக்கெட் மூலமாக சிக்ஸர் அடித்தால் சரிதான்!
முகமூடி பிரஸ்மீட்டில் மிஸ்கின் கூறியவை
மேலும் சினி செய்திகள்

.jpg)