நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது?
- Friday, 14 September 2012 14:17

மருத்துவரும் நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ 65 இலட்சம் ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனி நபர் ஒருவர், சீனிவாசன் 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்து விட்டார் என்று கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப் பட்டார்.
தனது சொந்த பணத்தில் படம் தயாரித்து அதன் மூலம் நடிகராக அறிமுகமாகிய சீனிவாசன், மருத்துவராக இருந்து நடிகராக மாறியவர். இவர் தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பெயர் வைத்துக் கொண்டு, தனி பாணியைக் கடைப் பிடித்து நடித்து வந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிதான் தனக்குப் போட்டி என்று அதிரடி அறிவிப்புக்கள் விட்டு திணற அடித்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த லத்திகா திரைப்படம் ஒரு தியேட்டரில் மட்டும் ரொம்ப நாள் ஓடிய மர்மமும் உண்டு.
இவர்மீது தனி நபர் ஒருவர் சென்னை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ரூ.65 இலட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீனிவாசனை அழைத்து சென்று விசாரித்த காவல் துறையினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வந்துள்ளனர். பணத்தை திருப்பித்தர் கால அவகாசம் கேட்ட போதும் உடனடியாக திருப்பித்தரவேண்டுமென பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். இந்நிலையில் சீனிவாசனிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை பின்னர் புழல் சிறையில் தடுத்துவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அண்மையில் 'லட்டு திண்ண ஆசையா' எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் கூட்டு சேர்ந்த்து நடித்துக்கொண்டிருந்தார்.

.jpg)