Friday, May 24th

Last update05:37:36 PM

சாருலதா, சவாலான திரைப்படம் தான்! : பிரியாமணி

பருத்திவீரன் திரைப்படத்தில் அபாரமாக நடித்து பெயர் வாங்கியதோடு, தேசிய விருதையும்  பெற்றவர்  இயக்குனர் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான நடிகை பிரியாமணி. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சாருலதா.

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பற்றிய கதையில் மிகவும் கஷ்டப்பட்டு, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடிகை பிரியாமணியே இரட்டை வேடங்கள் செய்துள்ளார். படம் நன்றாக ஓடி, ரசிகர்களின் மதிப்பை பெற்றிருக்கும் வேளையில் படத்தில்  நடித்த தனது அனுபவம் பற்றி பேசியுள்ள பிரியாமணி, தேசிய விருது கிடைக்குமா என்கிற கேள்விக்கு கிடைத்தால் சந்தோசம் என்று கூறியுள்ளார்.

   மேலும் படத்தைப் பற்றி அவர் கூறுகையில்,"சாருலதா படத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். அதைவிட அதில் வேலை பார்த்த கேமராமேன் பன்னீர் செல்வம்  முதற்கொண்டு அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம். ஒரு காட்சியை இரண்டு முறை ஷூட் செய்ய வேண்டும். ரொம்ப கஷ்டம், இதை நான் நடிக்க ஒரு சேலஞ்சிங் கேரக்டரா எடுத்துக் கொண்டதைப் போலவே , டெக்னீசியன் களும் சேலஞ்சிங்கா எடுத்துக் கொண்டார்கள். இந்திய தமிழ் சினிமாவில் இப்படி ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கதை புதிது.

      கிளைமேக்ஸ் காட்சிகளில், தீப்பிடிக்கும் காட்சிகளில் ஒரு ஹீரோவுக்கு எப்படியெல்லாம் டெக்னீசியன்கள் கஷ்டப்பட்டு காட்சி அமைப்பார்களோ அப்படி எனக்கு கஷ்டப்பட்டார்கள். எனக்கு இன்னொரு ஒட்டிப் பிறந்த பெண்ணாக சப்போர்ட் கொடுத்தவர் தீபிகா என்ற்கிற பெண். அவருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். படம் ரிலீசாகி நல்ல ரிசல்ட்  வந்திருக்கிறது. ஆனால், நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களும் போய் பார்த்து இதுபோல முயற்சிகளுக்கு வரவேற்பு கொடுக்கவேண்டும்" என்கிறார்.

தமன்னா புதிய படங்கள் சில
Y G மகேந்திரனின் ரகசியம் பரம ரகசியம் நாடகம் புகைப்படங்கள்
புத்தகம் திரைப்படத்தின் ஷுட்டிங்க் ஸ்பாட் புகைப்படங்கள்

     தேசிய விருது கிடைக்குமா என்கிற கேள்விக்கு, "அவார்ட் எதிர்பார்த்து இந்த கதையை நான் ஒப்புக் கொள்ளவில்லை. கதை இநதிய சினிமாவுக்கு மிகவும் புதிது, நல்ல முயற்சி, எனக்கும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த திருப்தி இருக்கும். தவிர ஒரு ஆர்டிஸ்ட் இதுபோல வித்தியாசமான கதை அமைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நினைப்பவள் நான். ஒரேமாதிரி கேரக்டர் என்றால் நமக்கே போரடித்து விடும் பிறகு மக்களைப் பற்றிக் கேட்பானேன்..அதனால் நான் அவர்ட் எதிர்பார்த்து இந்த படத்தை ஒப்புக் கொள்ளவில்லை. கதையில் நடிக்க நல்ல ஸ்கோப் அதனால் ஒப்புக் கொண்டேன்,. ஆனால் தேசிய விருது கிடைத்தாலும் சந்தோஷம்தான்.
     
இதுபோல கமர்ஷியல், மற்றும் கதை அம்சம் இநதிய சினிமாவுக்கு புதிது. எனவே சாருலதா படத்தை இதுவரை பார்க்காதவர்கள் தியேட்டரில் போய் பார்த்து இதுபோல கதைகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்கிறார் அவர். சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் விரைவில் திரைக்கு வரவுள்ள மாற்றான் திரைப்படமும் ஒட்டியிருக்கும் இரட்டையர் கதை என்பதால், சாருலதா சாயல் இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்க வட்டாரத்தில்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus