Tuesday, May 21st

Last update06:57:26 AM

இங்கிலீஷ் விங்கிலீஷ் : இரு பெண்களை சினிமா உலகம் திரும்பி பார்க்கிறது

இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் ஆரம்பித்த காலக் கட்டத்தில் இருந்தே நடிகை ஸ்ரீதேவி பேசப்பட்டு வந்தார்.

இப்போது இந்த பட இயக்குனர் பற்றியும் அனைவரும் பேசும் அளவிற்கு வசூலில் சாதனை படைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகி, ஒரே சமயத்தில் வெளியான படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். தமிழ் நாட்டில் மட்டுமே 120 தியேட்டர்களில் திரையிடப் பட்டு ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இதற்குக் காரணம் நடிகை ஸ்ரீதேவிதான். 15 வருடங்களுக்கு முன்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டவர் ஸ்ரீதேவி. இதனால் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் ஆரம்பிக்கப் பட்ட காலக் கட்டங்களில் இருந்தே பலத்த எதிர்பார்ப்பு. மேலும் இதில் நடிகர் அஜீத் சின்ன கதா பாத்திரத்தில் பெருநன்மையாக நடித்து இருந்தார்.

சுண்டாட்டம் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வு

கீரிப்புள்ள இசை வெளியீடு இங்கே

நிகழ்வொன்றில் ப்ரியா ஆனந்த் அழகிய படங்கள்      

The BIG Chennaiite Awards 2013 - கேலரி

ராம்சரன், ஜெனிலியா புதிய தெலுங்கு திரைப்பட கேலரி

Pizza - Tamil Movie Ready To Serve : படங்கள்

இதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம் எனலாம். இதை எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு, ஒரு படைப்பாளியின் உழைப்புக்கு மதிப்பு கூடியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் கவுரி ஷிண்டே, பலராலும் பேசப்பட்டு வருகிறார். அத்தனை சிறப்பாக நம்பிக்கையுடன் வலுவாக காட்சிகளைப் படமாக்கிய அந்த தெளிவு எனக்குப் பிடித்து இருந்தது என்று கூட நடிகை ஸ்ரீதேவி சொல்லியிருந்தார்.

மேலும் ஸ்ரீ தேவி சொல்லியது, கொஞ்சம் கூட கவுரி ஷிண்டேவுக்கு தாம் அமைத்த காட்சிகளில் சந்தேகமே வரவில்லை,அவர்  அத்தனை கான்பிடண்டாக இருந்தது எனக்கு வியப்பளித்தது என்றும் கூறியுள்ளார். இயக்குனர் கவுரி ஷிண்டே விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர். பா பட இயக்குனர் பால்கி யின் மனைவி.

தானே கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம், இயக்குனர் கவரி ஷிண்டே தமது வெற்றிப் பயணத்தைத் துவக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்றே சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் இவர்கள் கூறுவதாவது, ஒரு பெண் இயக்குனர் கமர்ஷியல் கலந்த, ஒரு யதார்த்த சினிமாவைக் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்பதும்தான்.

மேலும் சில சினி செய்திகள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus