யூடியூப் கோர்னர்

பெண்மையை, கலைகளைப் போற்றும் நவராத்திரி நாட்களிவை. பண்பாட்டுக் கூறுகளை வளர்ப்பதற்கான விதைப்புக் காலம் எனவும் சொல்லலாம்.

எம் இளையதலைமுறை எவ்வாறு நம் கலாச்சாரத் தொடர்ச்சியை மேற்கொள்ளப் போகின்றதெனும்
வினாவும், விருப்பமும், புலம் பெயர் மூத்த சமூகத்தின் பெருஞ் சிந்தனை. இரட்டைக் கலாச்சாரத்துக்குள் இளைய
சமூகம் சிக்கித் திணறி மூட்டி மோதுகின்றது. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதாகப் பட்டுத் தவிக்கும் அவ்வாறான
இளையவர்கள் மத்தியிலிருந்து அவ்வப்போது நம்பிக்கையின் துளிர்கள் மேலெழுகின்றன.

அவ்வாறான நம்பிக்கைத் தளிர்களில், நோர்வேயின் நாட்டில் வாழும் நம்பிக்கை நாயககிளாக மீரா, தீபா, திருச் செல்வம் சகோதரிகளைக்
காணமுடிகிறது. புல்லாங்குழல், கிட்டார், முதலான பல்வேறு இசைக் கருவிகளை இசைப்பதிலும், பாடுவதிலும், திறமையாளர்களான இவர்கள்,
அபாரமான உடற்பயிற்சி விளையாட்டுகளிலும் நாட்டம்மிக்கவர்கள். நணபர்களுடன் இணைந்து 9 Grader Nord எனும் இசைக் குழுவை அமைத்து,
தங்கள் இசைப் பயணத்தினை வெற்றிகரமாகத் தொடரும் அவர்கள், தங்கள் ஆர்வம், சிந்தனை, என்பனவற்றை வெளிப்படுத்தும் வகையில்
உருவாக்கியுள்ள ஒரு கானொளிப்பாடல் Victoria. அச்சமில்லை அச்சமில்லை எனும் பாரதியின் சொல்லெடுத்துப் பாடும் அவர்களின்
காட்சிப்படுத்தல்கள், அவர்கள் அச்சமற்ற சிந்தனையை வெளிப்படுத்துகின்றன.

துருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சகோதரிகள் மீரா, தீபாவையும், தோழமைத் தோழர்களையும், பாராட்டலாம்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்