கும்கி படத்தில் உச்சகட்ட காட்சிகளில் இரண்டு யானைகள்தான் கதா நாயகர்களாம்!
- Friday, 12 October 2012 03:34
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் மிக எதிர்பார்ப்புடன் தயாராகிக் கொண்டிருக்கும் படம் கும்கி.
இதில் நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிப்பதும் சுந்தரபாண்டியன் புகழ் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடிப்பதும் தெரிந்த விஷயம், கும்கியின் தயாரிப்பாளர் இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கும்கி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் என்றும், இதன் படப்பிடிப்பு மலையும் மலை சார்ந்த இடங்களிலும் காடும் காடு சார்ந்த இடங்களிலும் படமாக்கப் பட்டு வருகிறது. படத்தின் ஒவ்வொரு விஷயமும் தத்ரூபமாக வரவேண்டும் என்று, மழை, வெயில், லைட்டிங், அருவிகளின் வேக வீழ்ச்சி இவைகளை, அந்தந்த கால நேரத்துக்கு ஏற்ப காத்திருந்து காட்சிகள் எடுப்பதாக கும்கி இயக்குனர் பிரபுசாலமன் கூறியுள்ளார்.
துப்பாக்கி திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்
பீட்சா திரைப்பட படங்கள்
Actor Adhi & Raihanah MARCH FOR SIGHT I CARE FOR care walk at hon for a cause stills
நந்தனம் திரைப்படத்தின் புதிய படங்கள்
போடா போடி சிடி கவர் படங்கள்
மேலும் இந்த படத்தில் உச்சகட்ட காட்சியில் கூட இரண்டு யானைகள் மோதும் காட்சி மழையில் படமாக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. கதையில் படத்தோடு ஒன்றியக் காட்சிகளாக யானைகளின் வாழக்கை முறையும் வருவதால் இந்த படத்தை குழந்தைகள் மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்ப்பார்கள் என்றும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வீடியோ :
துப்பாக்கி இசை வெளியீடு முழுமையான படங்கள் இங்கே
Sorry Teacher இசை வெளியீடு வீடியோ
மேலும் சினி செய்திகள்

.jpg)