உலகநாயகனின் பட இசை வெளியீட்டு விழா மூன்று ஊர்களில்?!
- Sunday, 14 October 2012 16:36
உலக நாயகன் கமலின் பிரமாண்ட இயக்கப் படமான விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரே நாளில் மூன்று ஊர்களில் நடக்கும் என்று ஆச்சரியத் தகவலை தெரிவித்து உள்ளனர் படப்பிடிப்புக் குழுவினர்.
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து இருக்கும் விஸ்வரூபம் படம், தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை உலகளாவிய தரத்துக்கு கொண்டு சேர்க்க எண்ணி கமல் ஹாசன் உலகாளாவிய தொழில் நுட்ப கலைஞர்களைக் கொண்டு படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆப்கானிஸ்தான் அமெரிக்க புகழ் பெற்ற நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். எனவே இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நீர்பறவை திரைப்பட ஆடியோ வெளியீடு : படங்கள்
ஜோதிகா வெளியீடும் லஷ்மி சாரி : ஸ்டில்ஸ்
துப்பாக்கி வெர்க்கிங் ஸ்டில்ஸ்
விஸ்வரூபம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நவம்பர் 7ம் திகதி மூன்று ஊர்களில் நடைபெற இருக்கிறது. அன்று காலை கோவையிலும் மதியம் மதுரையிலும் இரவு சென்னையிலும் என்று இசை வெளியீட்டு விழாவை அசத்த உள்ளனர் விஸ்வரூபம் திரைப்படக் குழுவினர். நவ 7ம் திகதி உலகநாயகனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத் தக்கது.
சினி செய்திகள் ஆங்கிலத்தில்:

.jpg)