Thursday, May 23rd

Last update01:29:16 PM

மாலைப் பொழுதின் மயக்கத்திலே பட நாயகி சுபா காலமானார்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் கதாநாயகன் ஆரியுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் சுபா பெத்தல்லா.

தமிழ் திரைப்பட உலகில் இப்படம் மூலம் அறிமுகமான சுபா, பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளவர். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர்.

கடந்த மூன்று மாத காலமாக மஞ்சள் காமாலை நோயின் காரணமாக சிறுநீரக் கோளாறு பிரச்சனையால் அவதிப் பட்டு வந்த சுபா, நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சுபாவின் உடல் லூதியானாவில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இன்று மாலை அவரின் இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus