ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டிலை வென்றார் ஆஜித்
- Friday, 26 October 2012 22:27

விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 டைட்டில் வின்னராக ஆஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நேரு விளையாட்டரங்கில் கிராண்ட் ஃபினாலே இறுதிப் போட்டி நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இறுதியிலேயே ஆஜித் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பிரகதி இரண்டாம் இடத்தையும், யாழினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். அடுத்தடுத்த இடங்களை சுகன்யா, கௌதம் ஆகியோர் பிடித்தனர். இதையடுத்து டுவிட்டரில் aajidh, pragathi எனும் சொற்கள் பிரபலாகியுள்ளன.
வந்தே மாதரம் எனும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை தனது முதலாவது தெரிவாகவும், உயிரே படத்திலிருந்து 'சந்தோஷ கண்ணீரே' எனும் பாடலை தனது இரண்டாவது தெரிவாகவும் ஆஜித் பாடினார். ஆஜித் ஒரு 'Born Superstar' என ஏ.ஆர்.ரஹ்மான் ஆஜித்தை வாழ்த்தினார். ஆஜித்துக்கு முதல் பரிசாக ரூ 60 இலட்சம் பெறுமதியான வீடு வழங்கப்படுகிறது. இதைவிட ஏ.ஆர்.ரஹ்மானின் KM Music Conservatory இசைப்பள்ளியில் ஒருவருடம் இலவசமாக கற்க ஸ்கொலர்ஷீப்பும் கிடைத்துள்ளது.
4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia
Tweets about "#Aajeedh"
.jpg)