Saturday, May 18th

Last update10:03:57 PM

விஜய் vs விஜய் படத்தில் ஜோடி சேரும் அமலா பால்?

இயக்குனர் விஜய் மில்டன், நடிகர் விஜயை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்பது தெரிந்த விஷயம்தான்.

ஆனால், தெரியாத விஷயம், விஜய்க்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிக்க உள்ளார் என்பதுதான்.

    இயக்குனர் விஜய் மில்டன், பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். மதராச பட்டினம், தெய்வத் திருமகள் என்பதோடு, இப்போது விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள தாண்டவம் என்று பட்டியல் நீள்கிறது. இயக்குனர் விஜய் தனது அடுத்த படம் நடிகர் விஜய் வைத்து இயக்கப் போகும் படம் என்றும் கூறினார்.

பூவோடும் புயலோடும் திரைப்பட படங்கள்
வவ்வால் பசங்க குழுவினருடன் கமல் படங்கள்
திருப்பதி பிரதர்ஸ் - விக்ரம் பிரபுவின் புதிய திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பம்
துட்டு திரைப்பட இசை வெளியீடு படங்கள்
பிரகாஷ் ராஜ் நடிக்கும் துள்ளி விளையாடு திரைப்பட படங்கள்

இந்த  படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா என்று மாடல் அழகிகளிடையே நடைப் பெற்றது. இருப்பினும், தற்போது அதிரடியாகத் தேர்வாகி இருப்பவர் நடிகை அமலா பால். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப் படவில்லை என்றாலும் படப்பிடிப்பு நவம்பர் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தெரிகிறது. போகிற போக்கில் நடிகை அமலா பால், இயக்குனர் விஜயின் ஆஸ்தான நாயகியாகிவிட கூடும். சமீபத்தில் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள அமலா பால் தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து, இயக்குனர் விஜய் படத்தில் நான் நடிப்பது தானாம் என்று சிலாகித்து போயுள்ளார்.

For more updates please join with : http://www.facebook.com/WorldCinema

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus