கருணாஸ் விவேக் இணையும் மச்சான் : கருணாஸ் ஹீரோ!
- Friday, 02 November 2012 06:14
தமிழ் திரைப்பட உலகில் இரு துருவங்களாக இருந்து கலக்கிக் கொடிருக்கும் விவேக்கும் கருணாஸும் இப்போது இணைய உள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் மச்சான்!
நகைச்சுவை நடிகர் கருணாஸ், திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களம் இறங்கி வெற்றி கண்டார். பின்னர் அம்பாசமுத்திரம் அம்பானி இப்போது ரகளபுரம் என்று இவரின் கதாநாயகன் அவதாரம் தொடர்ந்த படி உள்ளது. எனினும் விவேக் இப்போதுதான் பாலகாட்டு மாதவன் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
பாலக்காட்டு மாதவன் படத்துக்கு வசனம் எழுதுபவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் என்பது கூடுதல் தகவல். அதே போன்று கருணாஸ், விவேக் இணைந்து நடிக்கும் மச்சான் படத்துக்கு வசனம் எழுதுபவர் படத்தில் நடிக்கும் விவேக்தானாம். இப்படத்தை இயக்குபவர் சக்தி சிதம்பரம். மச்சான் படத்தின் நாயகன் கருணாஸ், காமெடி நடிகராக இணைந்து கலக்க உள்ளவர்தான் நடிகர் விவேக்.
தமன்னா திறந்து வைக்கும் Kalani kethan Shop - ஸ்டில்ஸ்
மணிரத்தினத்தின் கடல் பட பாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான்
எப்படி இப்படி கூட்டணிக்கு சம்மதித்தீர்கள் என்று விவேக்கிடம் கேட்டால், "நடிகர் கருணாஸ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அதோடு அவர் யார் பாணியையும் பின்பற்றாமல் தனி பாணியில் நடிப்பவர் அதுவும் எனக்கு அவர்மேல் நல்ல மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேல் கருணாஸ் என்னுடன் நீங்கள் நடிக்கவேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார், அதை என்னால் மறுக்க முடியவில்லை" என்று கூறுகிறார் விவேக். இது தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆரோக்கியம்!

.jpg)