திரைப்படவிழாக்கள்

ஆகஸ்டு 8.  பியாற்சா கிரான்டே பெருமுற்றம் அதிர்ச்சியில் உறைந்து போனது போன்றிருந்தது. 69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின்,  பியாற்சே கிராண்டே  பெருமுற்றத்தின் அகண்ட வெண் திரைக்கான அன்றைய திரைப்படம், திகில் படவகையைச் சார்ந்ததல்ல. மாறாக சமகால நிகழ்வுக் கதைக்களத்தைக் கொண்ட படம். 

படம் திரையில் அசையும் 105 நிமிடங்களையும் தாண்டி, பார்வையாளர்களிடம் இனம் புரியாத அச்சத்தை, அல்லது தமது குடும்பம் குறித்த ஒரு அவதானிப்பைத் தூண்ட முயற்சிக்கும் அப் படம் «Le Ciel Attendra» (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது).

ஒரு நாள் இரவு வழமை போன்று நீங்கள்  உங்கள் மகளுக்கான உணவை தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் எரிச்சலுடன் காணப்படுக்கிறாள். «டீன் ஏஜ் வயசுப் பசங்க, இப்படித்தான்» என உங்களுக்குள் சொல்லிக் கொள்கிறீர்கள். மறுநாள் விடிகிறது. அவளுக்கு என்ன நடந்தது என ஒன்றும் அவள் சொல்லவில்லை. நாளை மறுநாள் விடிகிறது. நீங்கள் தாமதித்து விட்டீர்கள். நிலைமை உங்கள் கைகளை விட்டுச் சென்றுவிட்டது.  அந்த நாள் தான் உங்களை தவிக்கவிட்டு அவள் காணாமல் போகிறாள்.

உங்கள் வீட்டுக் கதவினை தட்டிக் காவற்துறை உள்நுழைந்து,  உங்களது வாரிசு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கூறுகையில் உங்களது உணர்வு எவ்வாறானது என்பதை அழுத்தமாகச் சொல்லும் திரைக்கதை.

எவரும் இந்தப் பொறியில் சிக்கி வீழ்ந்துவிடலாம் எனும் புரிந்துணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவதில் இத் திரைப்படத்தின் இயக்குனர் Marie-Castille Mention-Schaar வெற்றி பெற்றிருக்கிறார்.

பியாற்சே கிராண்டே மேடையில் இத்திரைப்படக் குழுவினரை அறிமுகப்படுத்தி வைத்த போது,  இயக்குனர் Marie Castille னிடம் «எவரும் எளிதில் தொடத் துணியாத மிகச்சிக்கலான இப்பிரச்சினையை சினிமா மூலம் உலகுக்கு எடுத்துவரவேண்டும் என எண்ணியதற்கான காரணம் என்ன ? » எனக் கேட்கப்பட்டபோது, «எனக்கும் பருவயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். பருவ வயதை (Teen-Age) புரிந்துகொள்வது கடினம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் இருந்தது. பதிலைத் தெளிவாக பெற்றுக் கொள்ள முடியாவிடினும் கேள்விகளை எழுப்ப முடியும் எனும் நம்பிக்கை எனக்குள் இருந்தது.  நான் பதிலாக பெற்றுக்கொண்டவற்றை, சினிமா மூலம் மற்றவர்களுக்கு கடத்த முடியும் எனக் கருதினேன், முயன்றேன் என்றார்.  அவரது பதில்கள் மேலும் புதிய கேள்விகளையும் தோற்றுவிக்கலாம். அதுதானே படைப்பின் வெற்றி.

இயக்குனர் எண்ணத்தை வெறுமனே காட்சிகளாக அன்றி,  நிஜத்தின் உணர்வாக வெளிப்படுத்துவதில் வெற்றி காண்கின்றார்கள் இரு தாய்மாரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Clotilde Courau மற்றும் Sandrine Bonnaire இருவரும். எவ்வளவு முயன்றும் மகளின் மனநிலையை புரிந்துகொள்ள முடியாது தவிக்கும் தாய்மையின் பரிதவிப்பு நம்மைப் பற்றிக் கொள்கையில் பார்வையாளரின் உள்ளத்திலும், உடலிலும், அச்சத்தின் நடுக்கம் மெல்லத் தொடங்குகின்றது.

17 வயதுப் பெண் Sonia (சோனியா),  இனி திரும்பவே மாட்டாள் எனும் புறப்படும் புள்ளியில் நிற்கும் போது எதிர்பாராதவிதமாக இரகசியப் பொலிஸாரானால்  கைது செய்யப்படுவதில் ஆரம்பமாகிறது படம்.  அவள் புறப்படத் தயாரானது சிரியாவுக்கு என்பது உங்களுக்குத் தெரியாதா எனக் காவல்துறை வினாத் தொடுக்கையில் அதிர்ந்து போகின்றார்கள் பெற்றோர்கள்.

தெய்வீகத் தூய்மை பெறவும், பேரின்பம் அடையவும் எண்ணிலடங்கா ஆன்லைன் உரையாடல்கள் மூலம் வாக்குறுதி வழங்கும் அழகிய இளவரசன் ஒருவனுடன் இணைந்துகொள்ளப் போவதாக எண்ணிக் கொள்ளும் ஒரு இளம் பெண் (Mélanie),  தன்னை ஒத்த 12 வயது இளம் பெண்களிடமும் அதே போன்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றாள்.

உயர் பள்ளியில் கல்வி பயிலும், நன்னடத்தை கொண்ட மெலனி (Mélanie) செலோ இசையில் அற்புதத்திறன் கொண்டவள்.  காருண்யம் மிக்கவள்.  அவளது அற்புதமான குணாம்சங்களைக் கொண்டே மேற்குலகின் மீதான வெறுப்பினை,  சமூகவலைத்  தளத்தினூடாக  உருவாக்குகிறார்கள்.   «அன்னியமானவர்களிடம் (Strangers) பழக வேண்டாம்» எனும் பாரம்பரிய அறிவுரை அவளிடம் எடுபடாது போய்விடுகிறது.

வெவ்வேறு புள்ளிகளில் நிற்கும் இவ்விரு இளம்பெண்கள் எப்படி தமது எதிர்ப்புள்ளிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்கள் என்பதே படத்தின் தொடர்ச்சி.

Radicalization என்பதற்கு,  மதம், சமூகம், அரசியல், தொடர்பில் தமது தீவிரக்கோட்பாட்டொன்றை ஒருவருக்குள் வலிந்து புகுத்தும் முயற்சி என்பது விளக்கமாக அமையும். அதன் செயற்பாடு சிலவேளை மூளைச் சலவை செய்வதிலிருந்தும் தொடங்கப்படலாம். இத்திரைப்படத்தில் Deradicalization (மூளைச் சலவை) செய்யபப்ட்ட ஒருவரை, அதிலிருந்து மீட்டெடுக்கும் கதாபாத்திரத்தினூடு நடித்திதிருக்கும் இஸ்லாமியப் பெண் அப்டத்தில் பெற்றோருக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் மூலம் இஸ்லாமிய மதத்திற்கும், இஸ்லாமிஸ்டுக்களின் தீவிர கோட்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை எடுத்துக் காட்ட முயற்சிப்பார். திரைக்கதையின் சமநிலையை மட்டுமன்றிச் சமூகத்தின் மீதான அக்கறையையும் திரைக்கதையாக்கத்தில் வெளிப்படுத்துவதே அம்முயற்சி.

மூளைச்சசலவை செய்யப்படும் பெண்களாக நடித்திருக்கும், Noémie Merlant மற்றும் Naomi Amarger இருவரும்,  மூளைச்சலவை செய்யப்படும் போது மாற்றமடையும் அத்தனை முக, உடல் பாவங்களையும் முறையாக வெளிப்படுத்துவதில், இந்த மனமாற்றத்தின் கோரம் புரிகிறது.

பேஸ்புக்,  யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என, அரங்கில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, " நாங்கள் இச்சமூக வலைத் தளங்கள் ஊடாக பெரிதும் உரையாடுகிறோம்.  எம்மை யாரென இச்சமூகத்திற்கு அடையாளப்படுத்தும் அட்டையாக அவற்றை பார்க்கிறோம் என்பது மறுப்பதற்கில்லை. சமூகவலைத் தளங்கள் நன்மையையும், ஆபத்துக்களையும் ஒருங்கே தரக் கூடியன. அவற்றை பிரித்தரிந்து அறியும் பக்குவம் எம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது தான் விடைதெரியாத கேள்வி. பருவயதில் நாங்கள் மிகப் பலவீனமானவர்கள் தான். ஆனால் எங்களைப் பொருத்தவரை, நாம் வாழும் சமூகத்தின் இதயமும் இதே பருவ வயதினர் தான் என்றனர். 

சமகால உலகின் பயங்கரங்களை எண்ணிப் பயந்து, ஏழு கடல், ஏழு மலை,  தாண்டி, ஆழ ஒளிந்து கொள்ளும் கற்பனை ராஜகுமாரனாக நாம் இருந்து விடமுடியாது.  குடும்பத்தின் சக உறுப்பினர் மீதான அக்கறையை,  நம்மைச் சுற்றி நடக்கும் நாளாந்த நகர்வுகளின் மீதான அவதானிப்பை,  அதிகப்படுத்திக் கொள்ளும் நேயர்களாக மாற்றிக்  கொள்வதே சரியானது.  ஆனால் கவனம்; அதே புள்ளியில்தான் எதிராளிகளின் கவனயீர்ப்பும் தொடங்குகிறது என்பதுதான் இச்சமூகத்தின் முரண்நிலை என எச்சரிக்கையுடன் சொல்கிறது Le Ciel Attendra . 

Director
    Marie-Castille Mention-Schaar
Cast
    Clotilde Courau , Sandrine Bonnaire , Noémie Merlant , Naomi Amarger , Zinédine Soualem
Producer
    Marie-Castille Mention-Schaar
Cinematography
    Myriam Vinocour
Costumes
    Virginie Alba
Set Design
    Valérie Faynot
Sound
    Dominique Levert
Editing
    Benoît Quinon


- 4தமிழ்மீடியாவிற்காக : லோகார்ணோவிலிருந்து ஸாரா, மலைநாடான்.

 

European fear - Le Ciel Attendra (Heaven is waiting)

Locarno was almost in shock when 'Le Ciel Attendra' screened in Piazza Grande on August 8th because it is not a thriller but a thrilling movie of world's present day issues of the ISIS and Europe's struggle on it. Anybody who would see this movie definitely says that this 105 minute film raises unknown fear on adolescent and the care that need to take on their activities.

For example, One day your daughter was seemed to be nervous and not responding to any of your questions. You just leave this matter as teen age children are like this. But the next day she has disappeared and your shocked. You were searching every where and it is too late to handle this situation. Then suddenly police come to your home and knocked the door. The police says,'Your daughter has joined to ISIS terrorist organization and we need information.' What to say? you might be wordless and do not know what to do.

This situation is now common in some of families in Europe. The director of this film Marie-Castille Mention-Schaar want to tell this message of ISIS's trap towards European families and we can say he is succeeded. When Marie Castille asked, why did you choose a critical issue like this? by Piazza Grande host, He said, I too has two daughters and had some experience to know on teenagers struggles. Therefore for I had this awareness on critical issues like this for many years.

Those who done motherhood in this movie, Clotilde Courau and Sandrine Bonnaire had given a fantastic performance. They expressed their disability to understand their daughter even after maximum effort, make little fear on spectators mind.

'One beautiful prince who give countless promises to 12 years old young girl Melanie via online discussions . Melanie, a kind girl who interested in Cello music. She forget the advise by her family "not to speak with strangers". Meanwhile, the rest of the story of this film bind with radicalization, the difference between true Islam religion and radicalized Islamic concepts and how to overcome brain washed beliefs.

Noémie Merlant and Naomi Amarger were acting as brain washed girls in this movie and made remarkable facial expression. When they asked about the side affects of social media in Locarno they replied as follows,

"We are using these social media for most of the time in a day and seeing this social media as a medium to identify our selves to society. Though social medias are giving us back not only benefits but also danger in many ways. We do not  know how many of us can compare this and select what is suitable for us, is the question. Even though we are weak in these scales, the heart of the society is also us, the teenagers is not forgettable."

We can't hide our self as an imaginative prince who lives apart 7 seas and 7 mountains as in some literature. We should increase our awareness on our family members and the incidents that happened around us daily. But beware, our enemies distraction also begin in same point. This is the contrast level of our society. 'Le Ciel Attendra.' says.

 

4tamilmedia's special reports from Locarno

Translation by Navan

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்