திரைப்படவிழாக்கள்

மகிழ்ச்சி..!

ஒரு நல்ல நாவலை, கதையினைப் படித்த பின் வரும் பரவசம், இயற்கையின் அழகில், ஓவியத்தின் வண்ணச் சேர்ப்பில், இசையின் ரிதத்தில், கரைந்து, காணமற்போகும் சுகானுபவம், மனத்தில். “Ladies and Gentlewomen" ஆவணப் படத்தினை, 21.01.2018 அன்று சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் பார்த்த தருணமது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவின் திரைப்படவிழாக்கள் பலவற்றிலும் சுற்றி வருபவன் நான். லெஸ்பியன்களின் கதை சொல்லும் முழு நீளத்திரைக் காவியங்கள் பலவற்றை திரைப்படவிழாக்களில் பார்த்திருக்கின்றேன். அவைகள் எழுப்பாத கேள்விகளை, நியாயங்களைக் கூறி, தமிழில் வெளிவந்த அழகியலான ஒரு ஆவணப் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி.

ஒரு தாயின் பரிவோடும்,  சகோதரக் கரிசரனையோடும்,இயக்குனர் பா. ரஞ்சித்  மாலினி விஜயரத்தினத்தை அறிமுகம் செய்து வைக்க,  மாலினியின் துவக்க உரை, ஒரு சிறந்த கதைசொல்லியின் அழகான கட்டியம். மானுடத்தின் நேசிப்மை மனதுக்குள் பதியமிடும் “Ladies and Gentlewomen" , ஒரு கலகலப்பான கலகம்.

ஆம் அதை அப்படித்தான் சொல்லவேண்டும். மயிற்பீலி கொண்டு மருந்து தடவி, நோய்வலி போக்கும் மருத்துவம் போன்று, சமூகத்தின் பிணி தன்னை, உள்ளத்துணர்வு நாடிபிடித்து, மெல்லச் சுளுக்கெடுக்கும் தாய்மை மருத்துவச்சியாகத் தலை நிமிர்த்துகிறாள் மாலினி. உலக வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். எங்கள் வரலாற்றின் உண்மைகளில் இருந்து தொடங்குவோம் எனும் எண்ணத்தின் துவக்கம் இது..

ராஜஸ்தானின் தீஜா பீஜா, நாடோடிக்கதை, தமிழகத்தில் நடந்த பாப்பாத்தி, கருப்பாயி கதை, என்பவற்றின் துணையோடு, ஒருபால் உறவின், உணர்வு நெருக்கத்தினை, அது ஒடுக்கப்படும் வகைதன்னை, நியாயக் கூற்றுக்களோடும், எதிர் வாதங்களோடும், திரைமொழியின் நெறி நின்று சொல்வதில் இயக்குனர் காணும் வெற்றி, ஆமால்ல... அது தப்பல்ல. அதுவும் ஒரு உணர்வு.. உறவு, எனும் கருத்தினை , பார்வையாளன் மனதில், மெல்ல மெல்ல ஆழப் பதியமிடுகிறது.

படத்தின் கதையாடலுக்கு, கோட்டோவியங்களும், உறுத்தாத ஒளிப்பதிவும், இசைக்கோப்பும், கச்சிதமான படத் தொகுப்பும், வலுவாகக் கரம் கோர்க்கின்றன. ஆவணப்படம் ஒன்றினைப் பார்க்கின்றோம் எனும் எண்ணம் எழாமலிருப்பத்தில்,படத்தொகுப்பாளர் முன்னெழுகின்றார்.

கலைகளினூடு கலகம் செய்வோம் எனும் கருத்தின்வழி, இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம், தளம் அமைக்க, அதில் அழகாகவும், ஆழமாகவும், புள்ளி வைத்துக் கோலமிட்டிருக்கிறார்கள் மாலினியும், அவரது குழுவினரும். அரங்குகள் தாண்டி, ஆர்வலர் தாண்டி, ஒவ்வொருவர் உள்ளங்களிலும், மீண்டும் மீண்டும் பதியப்பட வேண்டிய திரைக்கோலம் “Ladies and Gentlewomen" .

ஆவணப் படைப்பாளியாக மாலினியின் பயணம் தொடர்கையில், தமிழுக்கு மிகச் சிறந்த திரையாவணங்கள் கிடைக்குமெனச் சொல்லி நிறைவு செய்ய நினைக்கையில், சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் இப்படம் காட்சிப் படுத்தப்பட்ட போது, நிகழ்வின் துவக்கத்தில் “ The Casteless Collective" குழுவினரால் பாடப்பெற்ற இரு பாடல்களும், தமிழுக்குப் புதிது. பாடல்வரிகளும், பாடியவர்களின் உடல்மொழியும், அற்புதமான அனுபவம் தந்தன.

உண்மையில் அந் நிகழ்வு ஒரு கலகலப்பான கலகத்தின் தொடக்கம்.....


-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி என்ற வரிசையில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இருந்து வருகிறது. விஜயின் படங்கள் 225 கோடி முதல் 250 கோடியும் அஜித்தின் படங்கள் 175 கோடி முதல் 210 கோடி வரையும் வசூல் செய்து வந்த நிலையில் ரஜினிக்கு கடைசியாக வெற்றிப் படமாக அமைந்த ‘பேட்ட’ 165 கோடி வசூல் செய்தது.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது