திரைப்படவிழாக்கள்

69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின்  6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.  

ஒவ்வொரு வருடமும் லொகார்னோ திரைப்படக் குழுவினர் தமது Open Doors மூலம் இதுவரை வணிகச் சினிமா உலகில் வலம் வந்திராத நாடுகளையும், அந்நாட்டின் நலிந்த சினிமா படைப்பாளிகளையும், லொகார்னோவின் திறந்த கதவுகள் மூலம் வெளிக்கொண்டு வருவார்கள். அவ்வகையில் இவ்வருடம் தொடக்கம் அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர்களுடைய கவனம் தெற்காசிய நாடுகளை நோக்கியிருக்கிறது. 

இந்தியா, சீனா அல்லாது பூட்டான், நேபாளம், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார், மாலைதீவு, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மாற்றுச் சினிமாக்களை கொண்டுவருவதே இதன் நோக்கம். 

அவ்வகையில் லொகார்னோ திரைப்படக் குழுவினரின் Open Doors இணைத் தயாரிப்பு பட்டறையில் பயிற்சி பெற்ற கலைஞர்களின் படைப்புக்கள் அடங்களாக இம்முறை Open Doors பிரிவில் திரையிடப்பட்ட 8 படங்களிலிருந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

அதன் படி  Kamar Ahmad Simon இயக்கத்தில் உருவான பங்களாதேஷ் திரைப்படமான «Day After Tommorow», Tashi Gyeltshen இன் பூட்டான் திரைப்படமான «The Red Phallus», Abinash Bikram Shah இன் நேபாள் திரைப்படமான «Season of Dragonflies» ஆகியன வெற்றி பெறன. 

நேற்றைய பியாற்சே கிராண்டே திரையரங்கு மேடையில் மேடைக்கு அழைக்கப்பட்ட இத்திரைப்படக் கலைஞர்கள், தமக்கான பரிசுக்களை பெற்றுக்கொண்டனர். இதன் போது, குறித்த பூட்டான் திரைப்படத்தின் இயக்குனர் Thashi Gyesltshen «எங்களது நாடு, மகிழ்ச்சிக்காகவே இதுவரை பிரபலமாகியிருந்தது. எதிர்வரும் காலத்தில் சினிமாவுக்காகவும் பிரபலமாகும். எம்மை இங்கு அழைத்து இவ்வளவு பெரிய கௌரவம் அளித்தமைக்காக எமது நன்றியுணர்வை வெளிப்படுத்தி நிற்கிறோம். 

பொதுவாக கலைச் சினிமாக்கள் (Art Cinema) இரண்டாம் தரமாகவே எங்கும் பார்க்கப்படுகிறது. மாற்றுக் கலைச் சினிமா படைப்பாளிகளுக்கான அங்கீகாரகமும், கௌரவமும் அடிக்கடி கிடைக்காவிடின் அவர்களுடைய படைப்புக்களும் அரிதாகிவிடும். இந்த Open Door பகுப்பும், இங்கு கூடியிருக்கும் உங்களைப் போன்ற ரசிகர்களுமே எமக்கான உற்சாகம். எனது படைப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பில் வேறு தொழில் செய்பவர்கள். ஒருவர் கட்டிட நிர்மாணி, இன்னுமொருவர் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்றவர், எமக்கான கலை ஆர்வம் மாத்திரம் வாழ்வாதாரத்திற்கு போதுமானதல்ல என்பதற்கு இவை உதாரணங்கள்» என்றார். 

வெற்றி பெற்ற திரைப்படங்களின் கதை என்ன?

Day After Tomorrow எனும் வங்காள தேச திரைப்படம், 200 கிலோ மீற்றர் தூரம் ஆற்றுநீரின் ஊடாக பயணம் செய்யும் இயக்குனரின் பார்வையில், அந்நாட்டை பிரதிநிதித்துவப்படும் நகர வாசிகள் முதல், குக்கிராமத்தில் வசிக்கும் ஏழைகள் வரை அனைவரும் எப்படித் தெரிகிறார்கள் என்பதே கதை. பல பேரின் அன்றாட வாழ்வாதாரக் கதைகளைச் சேர்த்து ஒரு கதையாக இத்திரைப்படம் பேசுகிறது. 

«The Red Phallus» எனும் பூட்டான் திரைப்படம், ஒருவரை ஒருவர் வீழ்த்தத்துடிக்கும் அதே மூச்சில் ஞானம் அடைவது பற்றியும் சிந்திக்கும் மக்களின் முரண்நகை குறித்து அலசுகிறது. 

«Season of Dragonflies» எனும் நேபாளத் திரைப்படம், நவ நாகரீக உலகிற்கும், பாரம்பரிய பண்பாட்டு உலகிற்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண் ஏழையாகவும், பேரழிவைச் சந்திக்கும் ஒருவராகவும் இருந்தால்… நேபாளத்தின் ஓய்வற்ற வாழ்க்கைச் சிக்கலைக் காண்பிக்கிறது. 

லொகார்னோவின் Open Doors சினிமா கலைஞர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தின் ஒரு சிறிய வீடியோ தொகுப்பு இது. 

- 4தமிழ்மீடியாவுக்காக: லொகார்னோவிலிருந்து ஸாரா

Locarno opened the door for south Asia's decadent cinemas this time
 
Those films win in open door competition were announced and awarded on the 6th day (09/08/2016) of Locarno film festival. This time Locarno's open door cinema is focused mostly on south Asian decadent movies than previous festivals and Locarno planned to continue this focus for 3 years more. This effort is to bring the decadent movies from Bhutan, Nepal, Bangladesh, Sri Lanka, Afghanistan, Myanmar, Maldives, Indonesia and Pakistan.
 
This year the winners from open door section are announced from 8 movies created by the artists who trained in Locarno's open door's Lab. The detail about the winning movies and its makers are given below.
 
A Bangladeshi film 'Day After Tomorrow' directed by Kamar Ahmad Simon, A Bhutan film 'The Red Phallus' directed by Tashi Gyeltshen and a Nepal film,'Season of Dragonflies' directed by Abinash Bikram Shah were won the awards in open door cinemas.
 
When Bhutan movie director Tashi Gyeltshen spoken to audience on Locarno stage he told, 'Our country is popular for happiness until now. I am glad to say that our nation will be popular for cinema in future too. We are so much thankful and wordless to express it to Locarno for giving us such a honor.'
 
When Tashi continues, 'Generally 'Art cinemas' are seeing in second place. If we don't get recognition to our Arts, then they will be disappears in future. Therefore this kind of film festivals and open door showings are the only hope for us. Because The awareness we have towards our creation not only enough for our life costs too. Even in our film the actors are depending on their jobs, one person is civil engineer, another is pilot etc.
 
What is the story of the winning movies?
 
'Day After Tomorrow' a Bangladeshi film shows, that a person travelling in the view of 200 Km long river and how he experience the lifestyle of the Urban people and Hamlet people and also the story of their lives is notable.
 
'The Red Phallus' a Bhutan film describes about the people who thinks about enlightenment and at the same time their urge to be cruel and habit of make others fall down to them.
 
'Season of Dragonflies' a Nepali film shows the endless life complexity of Nepal by comparing a woman who is trapped between modern world and ancient cultural world who is also a poor and even faces mass destruction.
 

 

- 4tamilmeda's Reporters from Locarno 
- English Translation by Navan 

 

 

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்