திரைப்படவிழாக்கள்
Typography

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு Open Doors பிரிவில், இலங்கையின் இரு முக்கியமான முழுநீளத் திரைப்படங்கள் காட்சிக்கு வந்தன.

தமிழ்மொழி மூலத்தில், இயக்குனர் பயஸ் ரட்ணம் அவர்களது நெறியாள்கையில், Demons in Paradise ( சொர்க்கத்தின் பேய்கள்) ஆகஸ்ட் 6 ந் திகதி திரையிடப்பட்டது. சிங்கள மொழி மூலத்தில், இலங்கையில் முக்கியமான சிங்கள இயக்குனர்களான, அசோக கந்தகம, விமுக்தி ஜயசுந்தர, பிரசன்னா விதானகே, ஆகியோரின் நெறியாள்கையிலான Thundenek (Her. Him. The Other) "மூவர்" ஆகஸ்ட் 8 ந் திகதி காட்சிப்படுத்தப்பட்டது.

இவற்றின் திரையிடல்களிலும், பின்னர் உரையாடல்களிலும், இத் திரைப்படங்களின் இயக்குனர்கள் நேரில் கலந்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்தனர். " 30 ஆண்டுகால சிவில் யுத்தத்திற்குப் பின்னதான காலத்தில், கலைஞர்களாக நாம் நமது சமூகத்தின் முன்னால் வைத்த கருத்துருவாக்கங்களின் வெளிப்பாடே ப் படைப்புக்கள் " எனும் பொருள்படவெ அவர்களது உரைகள் இருந்தன. இந்த இரு படைப்புக்களும், தாம் சார்ந்த சமூகத்தின் சிந்தனைக்கான கருத்துருவாக்கம் செய்வதைக் கவனத்திற்கொள்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. இது தொடர்பில் இருவேறு சமூகங்களிடமும் இருந்து இப்படைப்புக்களுக்கான எதிர்வினைகளும் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத் திரையிடல்களின் பின்னதான சந்திப்பின்போது, இயக்குனர் பிரசன்ன விதானகே குறிப்பிடுகையில், " சிங்கள, தமிழ்சினிமா, எனும் நிலை கடந்து இலங்கைச் சினிமா எனும் தனித்துவம் காண்பதில் இனியாவது அக்கறை கொள்வோம்" எனச் சொன்னார். அதற்கான தொடக்கமாக இப் படைப்புக்களின் திரையிடல்கள் அமைந்திருக்கின்றன.

இப் படங்கள் குறித்த விரிவான பார்வைகள் தனியான பதிவுகளாக இடம்பெறும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்.

- படங்கள் : Locarno Festival

BLOG COMMENTS POWERED BY DISQUS