திரைப்படவிழாக்கள்

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில், இலங்கை, மியன்மார் நாடுகளை சேர்ந்த இரு திரைப்படத் தயாரிப்பு பணிகளுக்கு பாரிய நிதியுதவி பரிசுத் தொகைகிக டைத்துள்ளது. தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமாவுக்கான சுவிற்சர்லாந்தின் நிதியுதவி மையம், மற்றும் லொகார்னோ நகர நிதியுதவி மையத்தினால் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை, Maw Naing எனும் வியட்நாம் இயக்குனர் The Woman எனும் திரைப்படத் திட்டத்திற்காகவும் (சுமார் 35,000 சுவிஸ் பிராங்குகள்), இலங்கையின் சஞ்சீவ புஷ்பகுமார Mother எனும் திரைப்படத் திட்டத்திற்காகவும் (சுமார் 15,000 சுவிஸ் பிராங்குகள்) கிடைத்துள்ளது. கடந்த வருடம் Open Door பிரிவில் காட்சிப்படுத்தப்பட்ட இவருடைய Burning Birds திரைப்படம், அதன் காட்சி அமைப்பில்  பார்வையாளர்களை உறையச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Open Doors Lab எனப்படும் தயாரிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையின் ஊடாக இலங்கையை சேர்ந்த சுமுது மலலகம எனும் இளம் பெண் தயாரிப்பாளருக்கு இந்த வருட நவம்பரில்  இத்தாலியின் டொரினோவில் நடைபெறும் தயாரிப்பாளர்களுக்கான மாபெரும் ஒன்றுகூடலில், ஐரோப்பியர் அல்லாத தயாரிப்பாளர்கள் குழுவில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

2019 தொடக்கம் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு தென் கிழக்காசிய நாடுகள் மையப்படுத்தப்படவுள்ளன.  லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் நலிந்த சினிமா படைப்புக்கள், இனிமேல் Open Door பிரிவில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், அந்நாட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கான கலந்துரையாடல், பயிற்சிப்பட்டறைகளும் லொகார்னோவில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

இவ்வருடத்திற்கான Open Door பிரிவில் இலங்கையை சேர்ந்த மூன்று படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் Tradition எனும் குறுந்திரைப்படம் மற்றும் இரு திரைப்படங்களில் ஒன்று இலங்கையின் சிறுபான்மையினத்தை பிரதிபலிக்கும் தமிழர்கள் சார்பில் உருவாக்கப்பட்ட Demon in Paradise. மற்றையது, பெரும்பான்கை இனத்தவர்களை பிரதிபலிக்கும் சிங்களவர்கள் சார்பில் உருவாக்கப்பட்ட Him, Her, Others (மூவர்) எனும் திரைப்படம். இவ்விரு திரைப்படங்களை பற்றியான பொதுவான ஒரு பார்வையை விரைவில் எதிர்பாருங்கள். 

- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்.

- படங்கள் : Locarno Festival

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது