திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

ஒரு இயக்குனரின் முதலாவது அல்லது இரண்டாவது முழு நீளத் திரைப்படம் கலந்து கொள்ளும் இப்போட்டிப் பிரிவில், தற்காலம், சகாப்தம், நேரம் என பல பொருள் படும் L’Epoque எனும் ஆவணத் திரைப்படம் பார்க்ககிடைத்தது.

Matthieu Bareyre எனும் இளம் பிரெஞ்சு இயக்குனரின் நெறியாள்கையில் உருவான முதல் முளு நீள ஆவணத் திரைப்படம் இது. 2015 சார்லி-ஹெப்டோ தாக்குதல் முதல் 2017 இல் மெக்ரொன் வெற்றி பெற்று பிரான்ஸ் அதிபராகும் தேர்தல் வரை, மூன்று வருட காலமாக தொடரும் கதை. பாரிஸில் தூங்காவனமாக காட்சியளுக்கும் தெருக்களில் இளைஞர்களின் இரவு வாழ்க்கையை பிரதிபலிக்கிறது மையக்கதை.

அவர்களுடைய ஆசைக் கனவுகள், துஷ்டக் கனவுகள், குடிபோதைக் கதைகள், மகிழ்ச்சி, சோர்வு, கண்ணீர், எதிர்காலம், நம்பிக்கை, விரக்தி, பெற்றோர்கள் பற்றிய பார்வை, இலட்சியம், ஞாபக மறதி என அனைத்தையும் மிக வெளிப்படையாக பகிர்ந்துகொள்கின்றனர் இளைஞர்கள். இணையாக, வேலையில்லாப் பிரச்சினை, போலீஸ் அராஜகம், தெருக் கலவரங்கள், வன்முறை ஆர்ப்பாட்டங்கள், பாதுகாப்பு கெடுபிடிகள், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள், கேளிக்கை விடுதி களொயாட்டங்கள், ஆபாசச் செயல்கள் என அனைத்தும் படக் காட்சிகளில் வந்து போகின்றன.  «நாம் வாழும் இந்நிகழ்காலம் என்பதென்ன என்ன» என்பதே இளைஞர்களிடம் முன்வைக்கப்படும் பிரதான கேள்வி.

அனார்ஸிஸ்டுக்கள், மாணவர்கள், களியாட்டங்களை விரும்பிகள், வேலையில்லாதவர்கள், போதைவஸ்து விற்பனையாளர்கள், கல்விமான்கள், நில ஏஜெண்டுக்கள் என சமூகத்தின் பலதரப்பட்ட முகங்கள்/தொழில்கள் கொண்ட இளைஞர்களை Mathieu Bareyre இன் கமெரா படம்பிடித்துள்ளது.

அதில் முக்கியமானவள் Rose எனப்படும் இளம் பிரெஞ்சுப் பெண். அவள் பெற்றோர் Dogo நாட்டைச் சேர்ந்தவர்கள். தற்கால பிரான்ஸின் இனவாத அநீதிகளை கண்டித்து, தெருவில் சக நண்பர்களுடன் போராடும் பெண். அவள் பார்வையில் தற்காலம் (l’Epoque) என்பது, அதிகாரத் தடிகளின்  «Poc» எனும் ஒலி.  வெற்று மண்டை உடைய ஆண் உரத்துக் கத்தும் «Poc» எனும் ஒலி. 

படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவரான Rose

Charlie Hebdo தாக்குதல் காலப்பகுதில் «Je suis Charlie» (சார்லியுடன் கைகோர்ப்போம்) என இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டித்து அனைத்து பிரான்ஸ் தேசப் பற்றாளர்களும் குரல் கொடுத்த அதே காலம் தான், போகோ ஹராமில் 150 பள்ளி மாணவர்கள் பேர், இதே போன்ற தீவிரவாதத்தால் கொல்லப்பட்டனர். எங்கே அதற்கான குரல் ஒலிக்கப்பட்டது என கண்ணீர் உரைய கமெரா முன் உரையாடத் தொடங்கும் Rose இன் குரல் 10 நிமிடம் கழித்து, மௌனமான போது, அக்காட்சியை பார்த்த பார்வையாளர்களின் கண்கள்  ஈரமாகத் தொடங்கியிருந்தன.

படம் முழுவதும் இரவு நேரம் மாத்திரமே படம்பிடிக்கப்பட்டிரும். வெகுசன, தொழில், கல்வி, இயந்திர வாழ்க்கையிலிருந்து கொஞ்சமாவது விலகி, இரவு நேரம் தான் இளைஞர்கள், உரையாடும் நேரம், இரவு நேரம் தான் தமக்கு விருப்பமான முகமூடிகளை அணியும் நேரம். அந்த இரவு நேரம் தான் அவர்கள் உயிர்த்துடிப்பாக இருக்கும் நேரம். அதனால் தான் இரவு படம்பிடிக்கத் தொடங்கினே. இம்மூன்று வருடங்களில் நான் நித்திரைகொண்ட நாட்கள் மிகக் குறைவு.  எனது படத்தில் தமது சுயத்தை பகிர்ந்து கொண்டவர்களின் நேர்மையை அறிவதற்காக, கமெராவை கையில் பிடிப்பதற்கு முன், அவர்களது நேர்மையான அறிமுகத்தை பெறுவதற்கு பலகாலம் வெறும் நபராக என்னை அறிமுகப்படுத்தி வேண்டியிருந்தது என்கிறார் Matthieu Bareyre. இம்முறை லொகார்னோவில், திரையிடப்பட்ட மிகச்சிறந்த ஆவணத்திரைப்படங்களில் ஒன்று என எந்தவித சந்தேகமும் இன்றி உறுதியாக கூறலாம்.

படத்தின் டிரெய்லர் : L'Epoque

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள் 

விஷாலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் தனது அடுத்த படமாக பிசாசு 2 குறித்த அறிவிப்பினை இயக்குநர் மிஷ்கின் நேற்றிரவு இன்று அதிகாலை இந்தியநேரம் நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.