திரைப்படவிழாக்கள்

நியோன் சர்வதேச திரைப்பட விழாவான «Visions du Réel» (உண்மையின் தரிசனங்கள்) இன் 50வது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 9 நாட்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எவ்வருடத்திலும் போலன்றி சுமார் 45’000 க்கும் மேற்பட்ட திரை ஆர்வலர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

50வது பதிப்பு எனும் கவர்ச்சி, புகழ்பெற்ற ஜேர்மனிய திரைப்பட இயக்குனரான Werner Herzog இன் வருகை, நியோன் நகரத்தில் திரைப்பட விழாவுக்கென மேலும் பல புதிய வரவேற்பு நிகழ்மண்டபங்களை அமைத்தமை, திரைப்பட விழாவுக்கென நியோன் உள்ளூர் மக்களை அதிகமாக உள்வாங்கியமை என இச்சாதனைக்கு பல உப காரணங்களைக் கூறும் திரைப்பட விழா ஒழுங்குதாரர்கள், அவையெல்லாவற்றையும் விட, கலந்து கொண்ட திரைப்படங்களின் பன்முகத் தன்மையும், திரைப்பட தரமும் பிரதான காரணங்கள் என்கின்றனர்.

திரைப்பட விழாவின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றான சிறந்த சர்வதேச முழுநீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதான Sesterce d’or (தங்க நாணயம்) விருதை, «Heimat is a Space in Time» எனும் ஜேர்மனிய திரைப்படம் வென்றது. சுமார் நான்கு மணித்தியால நீளம் கொண்ட இத்திரைப்படம், இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான ஜேர்மனி, புதிய தலைமுறைக்கு எப்படி கடத்தப்பட்டது, எது மறக்கடிக்கப்பட்டது, எது புறக்கணிக்கப்பட்டது என்பனதை கறுப்பு வெள்ளை நிறத்தில், மிக நேர்த்தியான கமெராச் சட்டங்களின் ஊடாக காண்பித்த திரைபப்டம் ஆகும். ஜேர்மனிய இயக்குனர் Thomas Heise இன் நெறியாள்கையில் உருவான இத்திரைப்படம், மேற்கு, கிழக்கு பாகங்களாக ஜேர்மனி பிரிக்கப்பட்டதிலிருந்து, அதன் புவிசார் மாற்றம், அதன் இயற்கை மாற்றம் என்பனவற்றையும், வரலாற்று ரீதியில் ஒரு ஆழமான  குரல் இணைப்புடன் அலசுகிறது.

Le Sesterce d’argent (வெள்ளி நாணயம்) எனப்படும், சிறந்த மக்கள் தெரிவு விருதை «Midnight Traveler» எனும் திரைப்படம் வெற்றி கொண்டது. Hassan Fazili மற்றும் Emelie Mahdavian ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம், ஆப்கானிஸ்தானில் ஒரு கஃபே நிலையம் திறந்து, கலாச்சார நிகழ்வுகள் நடைபெற இடம் கொடுத்தமைக்காக தலிபான்களால் விரட்டியக்கப்பட்ட ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம், எப்படி ஐரோப்பிய தேசம் நோக்கி நகர்கிறது என்பதனை காண்பிக்கும் திரைப்படம்.

Hassan Fazili அவருடைய மனைவியையும், இரு பிள்ளைகளையும் தனது கைத்தொலைபேசி கமெரா மூலம் தொடர்கிறார். தஜிகிஸ்தானில் அகதி தஞ்சம் புகுந்து, எந்த நன்மையும் விளையாததால், ஐரோப்பாவை நோக்கி படையெடுத்து, அகதிகளை சட்டவிரோதமாக கடத்துபவர்களிடம் உதவி கோரி மூன்று வருட போராட்டத்தின் மத்தியில் எப்படி ஐரோப்பா நோக்கிய அவருடைய பயணம் தொடர்கிறது என்பதனை காண்பிக்கிறது. அக்குடும்பம் அனுபவிக்கும் கொடுமையான வேதனைச் சூழலில் கூட, மிக அரிதாக காணக்கிடைக்கும் அக்குடும்பத்தைச் சுற்றியுள்ள தீவிரத் தருணங்கள் எம் கண் முன் விரிகின்றன. அதை எப்படியாவது தன் கமெராவினுள் கொண்டுவந்து விட வேண்டும் எனும் Fazili யின் தவிர்க்க முடியாத ஆசையும், அதன் விளைவும் எம்மிடம் அழகாக பகிரப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால், இந்த நிகழ்வுகள் மறக்கப்படிக்கப்படக் கூடாது என்பதற்காக மாத்திரம் அவர் படம்பிடிக்கவில்லை. இவற்றால் தான் பைத்தியமாகிவிடக் கூடாது என்பதற்காகவுமே அவர் படம்பிடிக்கிறார்.

இத்திரைப்பட விழாவில் விருது, நியோன் நகரத்தின் விருது வென்ற இன்னுமொரு திரைப்படம் That Which Does Not Kill  : பாலியன் வன்புணர்வு பற்றி இதுவரை பரீட்சயிக்கப்படாத இன்னுமொரு கோணத்தில் அலசும் படம் இது. இது தொடர்பிலான விமர்சனத்தை பார்வையிட : http://www.4tamilmedia.com/cinema/film-festivals/14287-that-which-does-not-kill

Photos Credits : Festival du Vision du Réel

 - நியோனிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.