திரைப்படவிழாக்கள்

சுவிற்சர்லாந்து சினிமாவின் மூத்த திரைப்படக்கலைஞரும்,  அரைநூற்றாண்டுகால முன்னோடியும், கடந்த மே மாதம் மறைந்தவருமாகிய Freddy Buache ஃப்ரெடி புச்சேயின் நினைவுகளுக்கான அர்ப்பணிப்புடன் ஆரம்பமாகியது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் 72வது தொடர்.

உலகின் முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவின் 72 தொடர் 07.08.2019 புதன்கிழமை ஆரம்பமானது. எதிர் வரும் 17ந் திகதி வரை நடைபெறும் இத் திரைப்படவிழாவில் 60 நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 250 திரைப்படங்கள், பத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இத்திரைப்படவிழாவிற்னெ உலகெங்கிலுமிருந்து 1000க்கும் அதிகமான திரைப்படக்லைஞர்கள் லோகார்ணோவிற்கு வருகை தருகின்றனர். புதிய படைப்பாளிகளுக்கான களத்தினைத் தரும் இத்திரைப்பட விழாவின் சிறப்புக்களில் ஒன்று திறந்தவெளிப் பெருந்திரை. பன்னீராயிரம் பார்வையாளர்களை உள்ளடக்கக் கூடிய பியாற்சா கிரான்டே  Piazza Grande பெருமுற்றத்தில் அமைக்கப்படும் பெருந்திரையில், தங்கள் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்படுவதை, பெருங் கெளரவமாகக் கருதுகிறார்கள் திரைத்துறைக் கலைஞர்கள்.

புதன் கிழமை காலையிலிருந்தே லோகார்ணோவில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலை மாறி, இதமான குளிரோடு கூடிய மிதமான காலநிலையில் மாலை மங்கியது. மக்கள் பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் கூடத்தொடங்கினார்கள். மாலை திரைப்படவிழாவின் செயலக முற்றத்திள் நடைபெற்ற தொடக்கவிழாவில், லோகார்னோ நகரசபைத் தலைவர், திச்சினோ மாநில அரசின் கலாச்சார அமைச்சர், சுவிஸ் மத்திய அரசின் கலாச்சார அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மத்திய அமைச்சர் Alain Berset அலைன் பெர்செட் லோகார்ணோ திரைப்படவிழா மற்றைய திரைப்படவிழாக்களிலிருந்து வித்தியாசமானது, மாற்றுச் சிந்தனையானது எனப் பாராட்டினார்.

இரவு 09.30 மணிக்கு விழாவினை பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடக்கிவைத்தார் லோகார்ணோ திரைப்படவிழாவின் தலைவர் மதிப்பிற்குரிய (Marco Solari) மார்க்கோ சோலாரி. இத்திரைப்படவிழா தனிமனித முயற்சியல்ல, பெரும் கூட்டுழைப்பு. அவ்வாறான ஒரு வருட குழுநிலையான, உழைப்பினை, காத்திருப்பினை, உங்கள் முன் 72வது தொடராகச் சமர்பிக்கின்றோம் என்றார்.

72 வது தொடரில் காட்சிப்படுத்தப்படும் படைப்புக்களின் பின்னால் நின்று உழைத்த ஆயிரத்துக்கம் அதிகமான கலைஞர்கள் இத் தொடரில் கலந்து கொள்ளவென உலகெங்கிலுமிருந்து வருகின்றார்களென க் கூறினார் விழாவின் தொழில்முறைச் செயற்பாட்டு ஒருங்கமைப்பாளர் Nadia Dresti நாதியா டிறெஸ்ரி. 12 மாதகால இருபதுபேரின் உழைப்பும், 100க்கும் அதிகமானவர்களது ஒரு மாதகால உழைப்பும், சேர்ந்து நிகழும் இத் திரைப்படவிழாவின் பத்து நாட்களும் 900க்கும் அதிகமானவர்களது கடின உழைப்பு இருக்கிறதுஎன்பதனை வெளிப்படுத்தினார் தலைமைச் செயல் இயக்குனர் Raphaël Brunschwig றப்பெல் புறூன்ஸ்விக்.

இந்த ஆண்டில் இத்திரைப்படவிழாவின் புதிய கலை இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர் Lili Hinstin லில்லி ஹின்ஸ்டின் ஆர்வமும் திறனுமிக்கப் பெண் என அறிமுகம் பெற்றவர். உண்மையானதும், தன்னம்பிக்கை மிக்கதும், சுதந்திரமானதாகவும் 72வது தொடர் அமையுமெனக் குறிபிட்டவர், தன்னுடன் பணியாற்றிய சகாக்களையும், தெரிவுகளைச் செய்த நடுவர்களையும், அறிமுகம் செய்து வைத்தபின், நிறைவாக லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழாவின் (2019) 72வது தொடரினை, சுவிற்சர்லாந்தின் மூத்த திரைப்படக்கலைஞரும், சுவிற்சர்லாந்து சினிமாத்துறையின் அரைநூற்றாண்டுகால முன்னோடியாகத் திகழ்ந்தவரும், கடந்த மே மாதம் மறைந்தவருமாகிய Freddy Buache ஃப்ரெடி புச்சேயின் நினைவுகளுடன் சமர்ப்பணம் செய்தார்.

பியாற்சா கிரான்டே பெருந்திரையில் முதல் நாள் காட்சியாகவும், முதல் திரையிடலாகவும், இத்தாலி மற்றும் பிரெஞ் மொழி மூலத்தில், பெண் இயக்குனரான Ginevra Elkann ஜினேவ்ரா எல்கானின் இயக்கத்தில், குடும்ப உறவுகளுக்கிடையாலான ஊடலையும், கூடலையும், சோகமும், நகைச்சுவையுமாகச் சொல்லும் Magari(If Only) "மகாரி" திரையிடப் பெற்றது.

- லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

72nd Locarno film festival had begun with memorial dedication to a pioneer

72nd Locarno film festival has begun with a memorial dedication to a late senior Swiss film artist 'Freddy Buache'  who was a half century old pioneer, passed away on last May. Locarno, the world's one of the most important film festival and its 72nd session had begun on 7th of August 2019 and will held until 17th.

There are 250 films from 60 countries has been scheduled to be shown in more than 10 theaters in Locarno. There are more than 1000 film artists around the world visits Locarno annually for the film festival. The biggest open space film screen situated in 'Piazza Grande' grand courtyard can accommodate 12 000 spectators. The film artists think they were honoured if their movies were selected to be shown in this 'Piazza Grande' main screen.

There were many people gathered in the evening in Piazza Grande for the opening day festival, while the rain has stopped and the breeze was blowing. On the opening ceremony,Locarno city council chairman, cultural minister of Ticino Canton and cultural minister of Swiss central ministry, Alain Berset were participated. Alain Berset declared that, 'Locarno is unique and alternative in thinking among other film festivals.'

The head of Locarno film festival honorable Marco Solari, initiated the 72nd session of the festival officially on Piazza Grande at 9.30pm. Then when she spoken to audience she has indicated that, 'Locarno film festival is not an effort from a single person. It is a biggest effort and 1 year worthy labor from many people and artists.

The professional operations coordinator of Locarno, Nadia Dresti told that, There are more than thousands of artists could visit 72nd Locarno film festival who were behind their creations that are to be shown in Locarno. The Chief executive  director of Locarno, Raphael Brunschwig said,'There were 12 months worthy labor of 20 people and 1 monthly worthy labor of 100 people and 10 days worthy labor of more than 900 people days while film festival is going on.

'Lili Hinstin' who take charged as new director of arts for Locarno film festival this year, has been identified as a woman with much awareness and talent. She has noted that the 72nd session of Locarno film festival will hold truthfulness, confidence and independence. She had introduced the persons who worked with her and moderators of performing arts after inition of the festival.

The final event of the opening ceremony of the festival was honoring and dedicating 'Freddy Buache' a late senior film artist and a a half century old pioneer of Switzerland cinema who passed away on May.

The film which has screened on first day and shown in Piazza Grande big screen on the first day was 'Magari' (If Only). This film was made in Italian and French languages and directed by a woman artist, 'Ginevra Elkann.' This film is based on relationships among family members and tell the story in the sense of comedy and worry.

- 4tamilmedia reporters from Locarno / Translation Navan