திரைப்படவிழாக்கள்

 

பிரபல அமெரிக்க படத் தொகுப்பாளரான Claire Artherton க்கு Vision Award Ticinomoda விருது வழங்கி கௌரவித்தது லொகார்னோ திரைப்பட விழாக் குழு. லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான இவ்விருது, திரைப்படத் துறையில் பின்புலத்திலிருந்து பணிபுரிபவர்கர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படுவது.

நவீன சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த சாண்டெல் அகெர்மென் (Chantal Akerman) இன் பல ஆவண, புனைவுத் திரைப்படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் Claire Artherton.

Hyper Realisme வகை சினிமாக்களுக்கு பெயர் போன குஸ் வன் செண்ட், மைக்கெல் ஹனாகே, டாட் ஹேய்னெஸ் போன்ற இயக்குனர்களுக்கு முன்னோடியானவர் சாண்டெல் அகெர்மென். அவருடைய திரைப்படங்களை பார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையில் நுழைந்தவர்கள் குறித்த இயக்குனர்கள்.

1986ம் ஆண்டு வெளிவந்த Letters Home திரைப்படம் முதல் 2013 இல் வெளிவந்த No Home Movie வரை முப்பது வருடஙக்ளுக்கு மேல் பெரும்பாலான சாண்டல் அகெர்மன் திரைப்படஙக்ளுக்கு படத் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் Claire Artherton.

சீனம் மற்றும் தாயோயிசத் தத்துவங்களில் பெரிதும் ஈர்க்கபப்ட்டவரான Claire Artherton «நான் வெற்றிடம் எனும் தத்துவ முறையில் பெரிதும் ஈர்க்கப்பட்டவள். நீ எதையும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. நீ எதையும் நடத்தி வைக்கப் போவதில்லை. நீ அவை தானாக நடப்பதற்கு இடமளிக்கப் போகிறாய். உன் வாழ்க்கையே  வெற்றிடம் எனும் இயங்கு நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தாயோயிச தத்துவம். நீ அந்த வெற்றிடத்தை உருவாக்கும் போது அந்த வெற்றிடத்தில், ஒன்று மற்றொன்றாய் மாறுகிறது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது. நான் படத்தொகுப்பு செய்யும் போது இவற்றையே முன்மாதிரியாக கொள்கிறேன். ஒரு ஆவணத் திரைப்படமோ, புனைவுத் திரைப்படமோ, நிஜ யதார்த்தத்தை அப்படியே விளங்கப்படுத்த வேண்டும் என நான் நினைப்பவள் அல்ல. நான் என் படத்தொகுப்பில் வெற்றிடத்தை மாத்திரம் உருவாக்குகிறேன். அந்த வெற்றிட இடத்தில், பார்வையாளர்கள் படத்துடன் தங்கள் சுய முயற்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். திரைப்படத்தை உணர்கிறார்கள். அதை பெற்றுக் கொள்கிறார்கள். அதை தங்களுக்கு தங்களுக்கு ஏற்ற வகையில் அனுபவித்துக் கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஒரு திரைப்படம், ஒருவரின் சுயத்தை பற்றியும், உலகத்தைப் பற்றியும் எண்ணங்களையும், கேள்விகளையும் உருவாக்க வேண்டும்» என்கிறார்.

படத்தில் காண்பிக்கப்படாத காட்சிகளுடன், அல்லது படத்தில் இல்லாமையாக இருக்கும் காட்சிகளுடன் எப்படி படத்தொகுப்பு மேற்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய போது, «பண்டைக்கால சீனர்கள் இயற்கையை ஓவியமாக வடிக்கும் போது அதற்கு வண்ணம் தீட்ட மறுத்தார்கள். அவர்களை பொருத்தவரை இயற்கை என்பது, அழகானதும், புரிந்துகொள்ள கடினமானதும் ஆகும். அதை மீள் உருவாக்கவோ, இன்னுமொரு கலை வடிவில் அப்படியே மறு உருவாக்கம் செய்ய முயற்சிப்பதோ பயனற்றது. அதனால் அவர்கள் தங்களுக்கே உரித்தான மை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். வண்ணங்கள் இன்றி கறுப்பு வெள்ளையிலும், தடித்த தூரிகையிலும் ஓவியங்கள் தீட்டினார்கள். அவர்களை பொருத்தவை இந்த வழியில் தான் அவர்கள் இயற்கையின் அண்மைக்கு வருவதாக உணர்ந்தார்கள். காரணம் அவர்கள் உருவாக்கிய வெற்றிட இடத்தில் பார்வையாளன் தனது கற்பனையால் நிரப்பிக் கொள்கிறான். இன்றைய படத்தொகுப்பும் இப்படித்தான் இருக்கிறது. அதிக வண்ணங்கள். அளவுக்கு அதிகமாக நிரப்பிக் கொள்கிறோம். எமக்கு வெற்றிடம், இல்லாமை என்பவற்றின் மீது பயம் மாத்திரமே இருக்கிறது. எனக்கு அந்த பயம் இல்லை. அதனால் படத்தில் இல்லாமையாக இருக்கும் காட்சிகளுடன் என்னால் பணிபுரிய முடிகிறது» என்கிறார்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

விஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

இந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.

நாம் வாழும் பூமி மற்றும் சூரியன், ஏனைய கிரகங்கள் அடங்கலான சூரிய குடும்பம் அமைந்துள்ள எமது பால்வெளி அண்டத்துக்கு (Milkyway Galaxy) இற்கு மிக அண்மையிலுள்ள அண்டம் அண்ட்ரோமிடா (Andromeda Galaxy) ஆகும்.

விஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.