திரைப்படவிழாக்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு, லொகார்னோவின் பியாற்சே கிராண்டே திறந்தவெளித் திரையரங்கு, படக் காட்சிக்கு ஒரு நாள் முதலாகவே Complete Sold-Out என 8000 டிக்கெட்டுக்கள் ஒரு திரைப்படத்திற்காக விற்றுத் தீர்க்கப்பட்டடன.

நீங்கள் இயக்குனர் Tarontino இன் தீவிர ரசிகர் எனில், அது என்ன திரைப்படம் என சொல்லத் தேவையில்லை. Tarontino இன் Pulp Fiction லொகார்னோவில் திரையிடப்பட்டு 25 வருடங்களுக்கு பிறகு Once Upon a Time in Hollywood எனும் அவருடைய புதிய திரைப்படம் நேற்று முதன் முதறையாக காட்சிக்கு வந்தது. நேற்றைய காட்சியை பார்த்த 8000 ரசிகர்கள் தான் இத்திரைப்படத்தின் முதல் பார்வையாளர்கள். விட்டு விட்டு பெய்த மழை, திறந்த வெளித் திரையரங்கை சற்று ஈரமாக்கிய போதும் சுமார் 2மணித்தியாலம் 30 நிமிடம் நீளத் திரைப்படத்தை அசராமல், அகலாமல் பார்த்து ரசித்தனர் லொகார்னோ ரசிகர்கள்.

திரைப்படத் துறையை விட்டு ஒதுங்கி புத்தகங்கள் எழுதப் போகிறேன், மேடை நாடகங்கள் இயக்கப்போகிறேன் என பல நாட்களாக அச்சுறுத்தி வரும் டரொண்டினோவின் இறுதி திரைப்படம் இதுவாக கூட இருக்கலாம். டி காப்ரியோ, பிரெட் பிட் என இரு பெரும் மகா நடிகர்களையும், 1960 களின் ஹாலிவூட் சினிமா உலகம் எப்படி இருந்திருக்கும் எனக் காண்பிக்க மாபெரும் பிரமாண்ட பின்புல Decoration Set க்களையும், அந்த நாட்களின் ஹாலிவூட் இசைப்பாடல்களையும் கொண்டு டரொண்டினோ உருவாகியிருக்கும் படம் இது.

ரிக் எனும் கதாபாத்திரத்தில் டி காப்ரியோ தொலைக்காட்சி நடிகராக, ஹாலிவூட்டில் சாதிக்கத் துடிக்கும், ஆனால் இலகுவில் துவண்டுவிடும் பலவீனமானவராக நடித்திருப்பார். அந்தக்காலத்தில் வரும் பெருவாரியான திரைப்படங்கள் Cowboy ஸ்டைல் ஆக்ஷன் திரைப்படங்கள் என்பதால் டி காப்ரியோவுடன் கூடவே சுற்றும் அவருடைய டூப்பாக (Double Stunt) ஆக அலட்டிக்கொல்லாத முரட்டுக் கதாபாத்திரத்தில் பிரெட் பிட் நடித்திருப்பார். இருவரும் நல்ல நண்பர்கள்.

டரொண்டினோ எனும் தனிமனிதனின் தனித்தன்மை திரைப்படங்கள் வரிசையில் நிச்சயம் இந்தப்படமும் சேர்ந்துவிடும். இறுதியில் மாத்திரமே டரொண்டினோ ஸ்பெஷல் அளவுக்குமீறிய இரத்த வன்முறையை பார்ப்பீர்கள். அதுவரை படம் ஹாலிவூட்டின் அந்தக்காலத்தை அப்படியே ஒவ்வொரு அங்குலமாக கொண்டுவர முனைந்திருக்கிறது. டி காப்ரியோ, தனக்கு ஒரு ஹாலிவூட் Cowboy சீரியலில் வில்லனாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதில் கஷ்டப்படுவார்.  வசனங்களை சரியாக மனப்பாடம் செய்து உச்சரிக்கத் தவறியதால், மனமுடைந்து பரிதவித்து கோபத்தில் அழும் காட்சியிலும், அதன் பின் மறுநாள் தன்னுடன் சக கதாபாத்திரத்தில் நடித்த ஒரு சிறுமி, "இப்படி ஒரு நடிகனை என் வாழ்நாளில் பார்க்கவே இல்லை» என காப்ரியோவின் காதில் வந்து சொல்லிச் செல்லும் காட்சியில், தன்னை பெருமையாக நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் காட்சியிலும் காப்ரியோவுக்கு நிகர் அவர் மட்டுமே.

டரொண்டினோவிடம், இப்படி ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தையும், ஒரிஜினல் ஸ்கிரீன்பிளேயையும் ஒன்றாக இணைத்திருக்கிறீர்கள், இன்றைய சினிமா உலகத்தில் இது பெரும் கஷ்டமாக இருக்கிறதா என கேள்வி எழுப்பிய போது,

«இது நிச்சயம் மிக கடினமானது. ஆனால், இது தான் எனக்கு வேண்டும். இன்றைய சினிமா உலகில் எவருமே உண்மையான செட்டுக்கள் போடுவதில்லை. CGI (Computer-generated imagery) தொழில்நுட்பத்தில் அனைத்தையும் கிராஃபிக்ஸில் செய்து விடுகிறார்கள். நாங்கள் 1960 களின் லாஸ் ஏஞ்சல்ஸையே மறுபடி உருவாக்கியுள்ளோம். அது  குதூகலமானது. இவ்வருட கோடைகால சினிமா வெளியீடுகளில், நாம் மாத்திரமே ஒரிஜினல் ஸ்கிரீன் பிளே கதையை கொண்டுவந்திருக்கிறோம். மற்றைய அனைவருமே, புத்தகத்தில் வெளிவந்த கதை, அல்லது ஒரு காமிக் ஸ்றிப் கதை அல்லது, கார்டூன் இவற்றில் வந்ததையே மறுபடி சினிமாவில் கொண்டுவருகிறார்கள். நாம் கொண்டு வரும் திரைக்கதைக்கு நாமே முன்னோடி. நான் அந்த வெள்ளைப் பக்கத்தில் எழுதத் தொடங்கும் முன் அந்தப்பக்கம் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை» என்கிறார் டரொண்டினோ.

Once upon a time in Hollywood திரைப்படம் பார்த்து முடியும் போது 1960 களின் ஹாலிவூட் உலகில் சென்று வந்த பிம்பம் உங்களுக்கு ஏற்படுவதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு நட்பு, பயம், வெற்றி, தோல்வி, சினிமா மோகம், ஹிப்பிஸ் இனவாதம் என அனைத்தையும் அவர் ஸ்டையில் காண்பிக்கவும் தவறவில்லை.

லொகர்னோ திறந்த வெளியரங்கில் டெரண்டினோவின் திரைப்படம் காண்பிக்கப்பட்ட போது மக்கள் கூட்டம் எப்படி இருந்தது என்பதனை இந்த காணொளியில் காணலாம்.

லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

விஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

இந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.

ஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்

எப்படி இருக்கீங்க? : மீண்டும்

இரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக! 

...

அடுத்த நாள்

இவரிடமிருந்து : ஹாய்!

மீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி?

 

சிறிது நேரத்திற்கு பின்

நலம் : நண்பரிடமிருந்து

ஏன் இன்னும் வேலைக்கு வரல்ல? : மீண்டும்

நீல நிற சரி அடையாளங்கள்

...


சிறிது நேர சிந்தனைக்குப்பின்

சாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்!

"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்"

...

அலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு

அவர்களில் ஒருவர் :

ஹாய்

ஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.

அவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல

ஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..?

எப்ப வறீங்க? பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து

நீல நிற சரி அடையாளங்கள்

...


அலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..

நீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..

.

யதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. 

4தமிழ்மீடியாவிற்காக ஹரிணி

இதையும் பாருங்கள் :

தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி !

 

விஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.