திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente போட்டிப் பிரிவில் போட்டியிடும் இரு திரைப்படங்கள் L’île aux oiseaux (பறவைகளின் தீவு) மற்றும் L’apprendistato (தொழில் பயிற்சி). இத்திரைப்படங்கள் இரண்டுக்கும் பெரும் ஒற்றுமை இருக்கிறது.

இரண்டும் இரு தொழில் பயிற்சியை பற்றி ஆவணப்படுத்தியிருக்கின்றன. ஆனால் ஆவணத் திரைப்படமாக அல்ல. கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜம். அந்ததந்த தொழில் பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள். ஆனால் கதை செல்லும் போக்கில் எம்மால் உணரப்படும் சில ஆச்சரியமான  மன உணர்ச்சிகளுக்கு படத்தின் திரைக்கதை புனைவும், அதுபடமாக்கப்பட்ட புனைவுக் காட்சி வடிவமும் காரணமாகும்.

செர்ஜியோ டி கொஸ்டா மற்றும் மாயா கோசா இருவரும் ஏற்கனவே லொகார்னோவுக்கு பரீட்சயமான இயக்குனர்கள். இருவரின் நெறியாள்கையில் உருவான புதிய திரைப்படமான  L’île aux oiseaux (பறவைகளின் தீவு) திரைப்படம், ஒரு விமான நிலையம் அருகில் தனித்துவிடப்பட்ட பறவைகள் சரணாலயம் ஒன்றில் தொழில்பயிற்சி மேற்கொள்ள வரும் ஒரு இளம் வாலிபன், அவனுக்கும் அப்பறவைகள் உலகுக்கும் இடையிலான தொடர்பு பற்றி அலசுகிறது. அப்பறவைகள், எங்கோ எப்படியோ ஏதோ வகையில் விபத்துக்குள்ளாக்கி காயம்பட்டு, சிகிச்சைக்காக வரும் பறவைகள். அச்சரணாலயத்தில் பணிபுரியும் நான்குபேர், இரு இளம் பெண்கள், ஒரு வயோதிபர், அவர் விரைவில் ஓய்வு பெறப் போவதால் அவரின் வெற்றிடத்திற்கு மாற்றாக வரும் குறித்த இளைஞன் ஆகியோர் இப்பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அப்பறவைகளின் இயலாமை, தேர்ச்சி, வலி, சந்தோஷம், மரணம் என அனைத்தையும் அவர்கள் பார்க்கின்றனர். குறித்த இளம் வாலிபன் ஏற்கனவே வெகுசன உலகிலிருந்து தனித்து விடப்பட்டவன். பறவைகளுடனும் அவற்றை பராமரிப்பவர்களுடனும் நன்கு ஐக்கியமாகத் தொடங்குகிறான். எப்படி குறித்த முதியவருக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர். பறவைகளுக்காக பணிபுரியும் இரு பெண்களின் கண்ணியம், அக்கறை எப்படிப்பட்டது, அவன் இந்த சரணாலயத்தில் தன்னை எப்படி உணர்ந்து கொள்கிறான் என அனைத்தும் அவனது குரல் பதிவிலேயே ஒலிக்கின்றன. இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் குறித்த பறவைகளுடனும், பறவகைகள் உலகத்தினோடும் ஏற்படும் இனம் புரியாத மாய பந்தம், இப்படத்தின் திரைக்கத்தை தொகுப்பின் வெற்றியாகும்.

இத்தாலிய இயக்குனர் David Maldi இன் நெறியாள்கையில் உருவான L’Apprendistato திரைப்படம், செல்வந்தர்கள் பயணிக்கும் கடல்பிரயாணக் கப்பல்களில் விருந்தோம்பலில் எப்படி மிகச்சிறந்த உணவுச் சேவகனாக உருவாக முடியும் என்பதனை பற்றியது.

அதனைக் கற்றுக் கொடுக்கும் ஒரு புகழ்பெற்ற விருந்தோம்பல் பயிற்சிக் கல்லூரியில் இணையும் பதின்ம வாலிபனான Luka, கொஞ்சம் கொஞ்சமாக தனது சக நண்பர்களிடமிருந்து மாறுபடத் தொடங்குகிறான். சேர்வெண்டாக தன்னை உருவாக்கி கொள்ள எந்தளவு தூரம் தனது பதின்ம வயது சுதந்திரத்தையும், பதின்மவயது சிந்தனைகளையும் இழக்க வேண்டியிருக்கிறது என்பதை அவன் உணர்வதே திரைப்படம்.

இத்திரைப்படமும் ஆவணத் திரைப்பட பாணியில், உண்மையாக விருந்தோம்பல் கல்லூரியில் இணையும் நிஜக் கதாபாத்திரங்களையே பின் தொடர்கிறது. ஆனால், குறித்த கல்லூரி ஆசிரியர்கள் கூட தெரிந்திடாத, கண்டுகொள்ளத் தவறிய மாணவர்களின் சோர்வு, அழுத்தம், விருப்பமின்மை என்பவற்றை இயக்குனரின் கமெரா கண்டுகொண்டு பின் தொடர்கிறது. அல்லது அது தான் புனைவாக்கப்பட்டிருக்கலாம்.

கழுத்துக்கும், தலையின் கீழ் பாக முடிவெட்டுக்கும் இடையில் சரியாக முடி வலிக்கப்பட்டு இடைவெளி இருக்கிறதா என்பது முதல்  மேஜை சாப்பாட்டுக் கரண்டியை எந்த கோணத்தில் மேஜையில் வைக்க வேண்டும் என்பது வரை அனைத்தும் Perfect எனும் உச்சத்தை நோக்கி மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

உணவு விருந்தோம்பலில் இந்தளவு கலை வடிவம் தேவையா என முரண்நகையாக கேள்வி எழும் வரை படம் வேண்டுமென்றே அனைத்து கட்டுப்பாட்டுக்களையும் மேலும் மேலும் ஆழமாக காட்டுகிறது. படம் பார்த்து முடிக்கையில் நீங்கள் சாதாரணமாக ஒரு நடுத்தர உணவகத்திற்கு சென்று சாப்பிடும் போது நீங்கள் உணரும் வசதிக்கும், ஒரு பணக்கார விடுதிக்கு சென்று சாப்பிட அமரும் போது ஏற்படும் வசதிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை மேலும் அதிகப்படுத்திவிடும்.  அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

Two Films concerning teenager's vocational education or training

There is a great unity between two films screened on this year festival's 'Cineasti del presente' division, titled 'Lile aux oiseaux' (Bird Island) and 'L'apprendistato' (The Young Observant). The unity is that both films are documented two kind of vocational education system but not as any documentary style film.

All the characters in these films may be are real characters who become to adopt those particular jobs in reality. But the screenplay fiction and the way it was filmed are responsible for those surprising feelings we feel while we watching these films.

The directors of the film ‹ L’ile aux oiseaux' Sergio di costa and Maya Gosa were already familiar to Locarno. This film is analyzing about the relationship between birds and a young adult, who seeks vocational training in a bird sanctuary situated lonely near an airport. There are many birds mysteriously get wounded and often come to this sanctuary and the four people including this young adult, an old man and two young woman are treating them as their occupation.

The old man is going to retire soon and the young adult has to fulfil his position. Meanwhile he was learning about the unique feelings of birds like disability, pain, happiness and death. The particular young adult was already isolated from the world of the mass, soon becoming united with birds and their caregivers.

How he felt in this sanctuary were all expressed in his words. We too magically bond with birds and their world while we seeing this film. It is the victory of the screenplay of the film too.

The second film was directed by an Italian director David Maldi, 'L'Apprendistato' is about how some teenagers try to become a best food servants in the ships where rich people make sea voyages. The teenager Luka, loses his unique thoughts, habits and independence and become strange after he committed to learn and become as a best food servant in a famous college of hospitality training.

This film is also like a documentary, showing the real characters who join in hospitality training colleges but also includes real and fictional feelings of them like tension, fatigue and unwillingness even those college teachers doesn't know yet.

There are many examples of perfectionism shown in this movie are so interesting. Like the servant must maintain the exact gap between the neck and lower part haircut on the head or they have to maintain the correct angle while he put the table spoons on the table.

This film is beautifully arising ironical questions on perfectionism throughout the scenes. You will definitely feel the rise of the difference between a visit to an ordinary restaurant and a high class restaurant after you seen the end of the movie. This rise can be positive or either negative.

- 4tamilmedia reporters from Locarno / Translation Navan

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தற்போது செயல்பட முடியாமல் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ‘புரொடியூசர் கவுண்சில்’ என்று அழைக்கப்படுவது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது