திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் Open Door பிரிவில், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நலிந்த சினிமா மையபடுத்தப்படுகிறது. லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம், மியன்மார், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மொங்கோலிய நாடுகள் இம்மையப்படுத்தலில் அடங்கும்.

இந்நாடுகளின் Mainstream Cinema எனச் சொல்லக் கூடிய வணிக நோக்கில் செயல்படும் திரைப்படத்துறையை தவிர்த்து, தன்னிச்சையாக, சுதந்திரமாக புதிய கலைவடிவங்களில் கலைத் திரைப்படங்களை உருவாக்க நினைக்கும் இயக்குனர்களை ஊக்குவித்தல், அவர்களது படைப்புக்களை உள்ளூரிலும் ஐரோப்பிய அளவிலும் காண்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகப்படுத்தல்.அவர்களுக்கு உதவும் உள்ளூர் Producers க்கு வெளித்தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல். இந்நலிந்த சினிமாக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவர என்ன செய்யலாம் என்பதனை ஆராய்தல் என பல செயல்திட்டங்களுடன் நடத்தப்பட்டு வருகிறது Open Door பிரிவு.

தென் கிழக்கு ஆசியாவை நோக்கி தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு நீடிக்கவுள்ள இந்த செயல் திட்டத்தின் முதலாவது வருடத்தில் மையப்படுத்தப்படும் நாடுகளில் முக்கியமானதாக கம்போடிய நாட்டின் இரு திரைப்படங்களை காணக் கிடைத்தது. இயக்குனர் Kavich Neang நெறியாள்கையில் உருவான இவ்விரண்டு திரைப்படங்களில் ஒன்று குறுந்திரைப்படம் (New Land Broken Road). மற்றையது முழு நீள ஆவணத் திரைப்படம்.

இயக்குனர் Kavich Neang

குறுந்திரைப்படம் அலசும் கதை,  கம்போடியாவின் Phnon Penh நகரத் தெருக்களில் மூன்று ஹிப்-ஹாப் நடன இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கின்றனர். இடையில் ஒரு  வறட்சியான தெருவோரம் அவர்களது மோட்டார் வண்டி நிறுத்தப்படுகிறது. ஒருவன் இறங்கி துலைந்து போன கைத்தொலைபேசியைத் தேடுகிறான். இன்னொருவன் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை பழுது பார்க்கிறான். இன்னுமொருவன், அவ்வழியில் உணவாகாரங்கள் விற்கும் ஒரு தெருக்கடை வண்டியையும், அதில் பணிபுரியும் ஒரு அழகான இளம்பெண்ணையும் சந்தித்து உரையாடுகிறான். அவள் வண்டி, வண்ணங்களாலும், நியோன் மின் குமிழ்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மறுநாள் காலை மூவரும் மீண்டும் நடனமாடுகிறார்கள். அவ்வளவு தான் காட்சியமைப்பு. ஆனால் காட்சிகளின் கோர்வையில் இன்றைய கம்போடியாவின் நகர்ப்புற மாற்றம், அபிவிருத்தி என்ற பெயரில் வானுயரும் கட்டிடங்களின் அதிகரிப்பு,  தெருவோர உணவுப் பழக்கவழக்கங்கள், கம்போடிய இளைஞர்களின் பொழுதுபோக்கு மோகம், இசை விருப்பம், நடனம்  என அனைத்தையும் 15 நிமிடத்தில் மிக இயல்பாக பிரதிபலிக்கிறது இத்திரைப்படம்.

இயக்குனர் Kavich Neang இன் முழுநீள ஆவணத் திரைப்படமான Last Night I saw you similing, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை ஒட்டி நடைபெறூகிறது.  Kavich Neang, அவரது குடும்பத்துடன் Phnom Penh நகரத்தின் வெள்ளை அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி ஒன்றில் வசித்து வருகின்றார். சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அக்குடும்பம் அங்கு வசித்து வருவதால், அக்குடியிருப்பு தொடரின் அனைத்து அயலவர்களையும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

திடீரென ஒரு நாள் ஜப்பான் நிறுவனம் ஒன்று  இந்தக் குடியிருபை முற்றாக இடித்து Casino ஒன்றை கட்டப் போவதாக, கம்போடிய அரசுடன் கூட்டிணைகிறதுஅதனால் 40 வருடங்களுக்கு மேல் அங்கிருந்த 493 குடும்பங்கள் உடனடியாக அக்கட்டிடத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும், விருப்பப்பட்ட அனைத்து பொருட்களையும், கதவுகள், ஜன்னல்கள் உட்பட அனைத்தையும் கழற்றிச் செல்லலாம் என அறிவிக்கப்படுகிறது.

அனைவரும் வெளியேறுவதற்கு முன் 10 நாட்களிலிருந்து தொடங்கும் திரைப்படம், அனைவரும், தமது பெட்டி படுக்கைகளை அடுக்கி, கதவு ஜன்னல்களை கழற்றி, வண்டியில் ஏற்றி அங்கிருந்து புறப்படுவது வரை அனைத்தையும் காண்பிக்கிறது. அவர்கள் புறப்பட்ட பின்னர் ஜப்பானிய கட்டிடக் கம்பனிக்காரர்கள் வந்து கட்டிடத்தை இடிக்கத் தொடங்குவதோடு முடிவடைகிறது.

பெட்டி படுக்கைகளை ஒவ்வொரு குடும்பமும் அடுக்கும் போது அவர்களது 50 வருடஙக்ளுக்கு மேலாக வாழ்க்கையும் அடுக்கப்படுகிறது. அனைத்தும் நடுத்தர குடும்பங்கள். படத்தின் ஒவ்வொரு கமெரா காட்சிக் கட்டமும், அங்குலம் அங்குலமாக அவர்களது அடுக்குமாடி வீடுகளின் உட்புறத்தையே கடைச் செக்கன் வரை காட்டிக் கொண்டிருக்கும். இறுதி காட்சியமைப்பில் அந்த அடுக்குமாடிக் கட்டிடம் உருவாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று ஆர்கைவ் வடிவில் காண்பிக்கப்படும். அப்போது தான் அக்கட்டிடத்தின் முழு நீள வடிவத்தின் வெளிப்புறத் தோற்றத்தை முதன் முதலில் காண்போம். ஆனால் அத்துடன் படம் முடிந்துபோகும். கேன்ஸ், பூசன், லொகார்னோ, நியோன் என பல முன்னோடி திரைப்பட விழாக்களின் பயிற்சிப் பட்டறையில் பயின்ற குறித்த இயக்குனரான Kavich, அடுத்து செய்யப்போகும் முழுநீள புனைவு திரைப்படம் ஏற்கனவே இன்று காண்பிக்கப்பட்ட குறுதிரைப்படத்தையும், ஆவணத்திரைப்படத்தையும் இணைத்து முழுநீள புனைவுத் திரைப்படமாக உருவாகப் போகிறது. குறுந்திரைப்படத்தில் நடித்த மூன்று இளம் ஹிப்ஹாப் நடனக்கலைஞர்கள் தான் கதாநாயர்களாக  நடிக்கப்போகிறார்கள். அவர்கள் வாழும் குடியிருப்பு பற்றியது தான் கதை என்கிறார் இயக்குனர். கம்போடிய சினிமாத் துறையின் ஆக்கபூர்வமான வளர்ச்சி அவர் சொற்களில் தெரிகிறது.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது