திரைப்படவிழாக்கள்
Typography

இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா, சீனா தவிர்த்த பல தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. Open Door பிரிவில், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்,  தாய்லாந்து லாவோஸ் நாடுகளும், பிரதான போட்டிப் பிரிவில் தென் கொரிய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அதோடு, இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் Excellence Award, தென்கொரியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான Song Kang-ho வுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் நடித்த ஏழு திரைப்படங்களை இயக்கியவர் Bong Joon-Ho. தென்கொரியாவின் புதிய சினிமா இயக்குனர்களில் மிக முக்கிய முன்னோடியான Bong Joon-ho வின் Snowpiecer திரைப்படம் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இவருடைய கடந்த வருடத் திரைப்படமான Parasite, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய தங்கப்பனை (Palm d’Or) பெற்றுக் கொண்டது. அதில் கதாநாயகனாக நடித்தவரும் Song Kang-ho தான்.

நான் தேர்ந்தெடுக்கும் திரைப்படம், அதன் திரைக்கதையில் தங்கியிருக்கிறது எனக் கூறும் Song Kang-Ho, எனது கதாபாத்திரம் அக்கதைக்கு எவ்வளவு தேவையானது என்பதே எனது முதல் கேள்வி. எனது கதாபாத்திரத்துடன், பார்வையாளர்கள் இலகுவில் தம்மை இணைத்துக் கொள்ள முடிகிறதா என அடுத்துப் பார்க்கிறேன். இவை இரண்டும் பொருத்தமானதாக இருந்தால், அத்திரைபப்டத்தை தெரிவு செய்கிறேன் என்கிறார் Song Kang-Ho.

2000ம் ஆண்டுகளில் தனது நடிப்பின் மூலம் கொரிய சினிமாவை மாத்திரமல்லாது, சர்வதேச அளவில் பல நாடுகளில் பார்வையாளர்களை வசமாக்கியவர் Song Kang-ho. இன்று உலகசினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS