திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.

தாழ்த்தப்பட்ட கவிதை உலகத்தை படம்பிடிக்க விரும்புவன் நான் எனக் கூறும் Fredi M.Murer சுவிற்சர்லாந்தின் நலிந்த குடும்பங்களின் வாழ்க்கையை கவித்துவமாக பிரதிநிதித்துவப்படுத்துபவர்.

லொகார்னோ திரைப்பட விழாவுக்கு ஏற்கனவே தனது சில படங்களுடன் பரீட்சமாயனவர். இவர் 1985ம் ஆண்டு உருவாக்கிய Alpine Fire திரைப்படம் லொகார்னோ திரைப்பட விழாவில் போட்டியிட்டு தங்கச் சிறுத்தை விருதை வென்றது. அதோடு அகடமி விருதுகளுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்பட வரிசையில் சுவிற்சர்லாந்து சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

அல்ப் மலைக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு விவசாயக் குடும்பம். பெற்றோருக்கு இரு பிள்ளைகள். ஒருத்திக்கு ஆசிரியை  ஆகவேண்டும் என்பது கனா. ஆனால் தந்தையால் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். சகோதரன், காது கேளாதவன். மனநிலை பாதிக்கபப்ட்டவன். அவர்களை சுற்றி நகர்வதே கதை.

Murer உருவாக்கிய Vitus எனப்படும் திரைப்படம் 2006 இல் வெளிவந்து மிகப் பிரசித்தம் பெற்றது. புகழ்பெற்ற மேதைச் சிறுவனாக விளங்கிய பியானோ இசைக்கலைஞன் Teo Gheorghiu அவனாக படத்தில் நடித்திரருப்பான். தனக்கு வழங்கப்படும் அசாதாரணமான பாதுகாப்பு, முக்கியத்துவம் என்பவற்றால் பாதிக்கப்படும் சிறுவன், தனது தாத்தாவுடன் (நடிகர் Bruno Ganz) இணைந்து அதனை எப்படி எதிர்கொள்கிறான் எபதே கதை.

நேற்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது பியாற்சே கிராண்டே மேடையில் கண் கலங்கிய Fredi Murer, நான் சுவிற்சர்லாந்தின் ஒவ்வொரு மூலைகளுக்கும் சென்று படம்பிடிப்பவன். ஆனால் வெளியுலகம் தெரியாதவன். எனது குறைபாடான ஆங்கிலத்திற்கு மன்னிக்க எனப் பேசத் தொடங்கினார்.

இவ்விருதுக்கும், என்னை அடையாளம் கண்டுகொண்டதற்கும் நன்றி. இத்திரைப்படவிழாவின் கலை இயக்குனரான லிலி ஹஸ்டன் என்னை சரியாக அடையாளம் கொண்டுள்ளார். கரடியா (பேர்லின் திரைப்பட விழா) பணையா (கேன்ஸ் திரைப்பட விழா) எனக் கேட்டால் நான் சிறுத்தையை (லொகார்னோ) வை விரும்புவன்.  இது தனிமனித உழைப்பல்ல. ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னால், கமெராவின் பின்னாலும், முன்னாலும் ஒரு கூட்டுழைப்பு இருக்கிறது. இவ்விருது அவர்கள் அனைவரும் சொந்தம் கொண்டாட வேண்டியது. இவ்வருடம் இறந்து போன எனது மதிப்புக்குரிய நடிகர் Bruno Ganz மற்றும் எனது மதிப்புக்குரிய படப்பிடிப்பாளர் இருவருக்கும் இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்.

இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நாம் பார்க்கும் சினிமாத் திரை இப்போது இப்படிச் சுருங்கி கைக்குட்டை அளவு வந்துவிட்டது. (சொல்லும் போதே தனது காற்சட்டை பையிலிருந்து ஒரு முகம் துடைக்கும் கடதாசித் துண்டை எடுத்து காட்டுகிறார். அதை நன்றாக கசக்கி உள்ளங்கையில் வைத்து முற்றாக பொத்தி திறக்கும் போது அது காணாமல் போகிறது) எதிர்காலத்தில் சினிமாத் திரை இப்படிக் காணாமல் போய்விடப்போகிறது. எச்சரிக்கையாக இருங்கள் என சொல்லி முடித்தார்.

உங்கள் திரைப்படம் உலகளவில் பேசப்படவேண்டுமா. உங்கள் கிராமத்தை படம்பிடியுங்கள் என Murer சொல்லும் வாக்கியம் உலகப் பிரபலமானது.  சுவிற்சர்லாந்தின் பன்மொழித் தன்மையும், பிரதான மூலப் பொருளாக தண்ணீரும், சாம்பலும் இருப்பதால், இந்நாட்டு மக்களிடம் ஒரு நெகிழ்வுத் தன்மையும், புத்திசாலித்தனமும் இருக்கிறது. ஆனால் இந்நாட்டின் நிலப்பரப்புக்கள், மலைகளுக்கு இடையே குறுகியும், நீண்டும் செல்வதால், ஒவ்வொரு மலைக் கிராமங்களில் வாழும் மக்களிடையே, ஒவ்வொரு குடும்பத்திற்கும்,  தமக்கென ஒரு ஆடம்பரமான ஆனால் தனிமையான சமூகப் பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு தனித்துச் செல்லும் குடும்ப பழக்க வழங்களையே நான் படங்களில் காட்ட முயற்சிக்கிறேன் என்கிறார் Murer.

- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்