திரைப்படவிழாக்கள்

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 72வது தொடர் நேற்றைய இரவில் நிறைவுக்கு வந்தது. நேற்று மாலை 9.00 மணிக்கு பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் ஆரம்பமாகிய பரிசளிப்பு மற்றும் நிறைவு நிகழ்வின் போது, " லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா சர்வதேச அரசியல், சமூகம், எனபவற்றின் கருத்துக்களைப் பகிரும் கலைத்தளமாகத் தொடர்ந்தும் பயனிக்க வேண்டும். திச்சினோ மாநில ரீதியாகவும், சுவிஸ் மத்திய அரசு ரீதியாகவும், முக்கியத்துவம் பெற்ற தளமாக தொடர்ந்திருக்கவேண்டும். இதுவரைகாலமும் இவ்விழா கொண்டிருந்த கலைச் சிறப்பின் தனித்துவம் மாறாமல், 2025 னை நோக்கிப் பயனிப்பதில் கவனம் கொள்கின்றோம்.." எனக் கூறிய, லோகார்னோ திரைப்படவிழாவின் தலைவர் மார்க்கோ சொலாரி, 73வது தொடர் 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05ந் திகதி ஆரம்பமாகும் என்ற அறிவிப்போடு இந்தத் தொடரினை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.

தனது கலை இயக்குனர் பணியின் முதலாவது தொடராக அமைந்த இம்முறை விழா திருப்தியையும் நம்பிக்கையினையும் தந்ததாகக் குறிப்பிட்டார் கலை இயக்குனர் Lili Hinstin லில்லி கின்ஸ்டைன். மேலும் லோகார்ணோவின் பார்வையாளர்களது தெரிவு, அவர்களது ரசணையின் தெளிவினையும் நுன்னறிவினையும் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்ப இயக்குனர் Raphaël Brunschwig ராப்பால் புறூன்ஸ்விக் 72வது தொடர் குறித்துக் குறிப்பிடுகையில், பதினொரு நாட்கள் நடைபெற்ற பல்வேறு திரையிடல்களில், மொத்தம் 1,57, 500 பேர் பார்வையாளர்களாக இருந்ததாகவும், இதில் பியாற்சா கிரான்டே பார்வையாளர்கள் மட்டும் 59,500 பேர் எனவும் குறிப்பிட்டார். 100க்கும் அதிகமான துறைசார்கலைஞர்களும், 800க்கும் அதியமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்ட தொடராக இது அமைகின்றது. அடுத்த ஆண்டின் 73வது தொடரை இதனிலும் சிறப்பாக செய்வதற்காக இன்றே பணிகளைத் தொடக்குகின்றோம் எனத் தெரிவித்தார்.

பரிசளிப்புக்களின் போது, பியாற்சா கிரான்டே பெருந்திரையிடலில் மக்கள் தெரிவாக பரிசு பெற்ற படமாக இயக்குனர் Boris Lojkine ன் நெறியாள்கையில் உருவான Camille கமீலே அறிவிக்கப்பட்டபோது பலத்த கரவொலி எழுந்தது. UBS வங்கியின் அனுசரனையில் வழங்கப்பெற்ற விருதினைப் பெற்றுக் கொண்ட இயக்குனர் Boris Lojkine கருத்துத் தெரிவிக்கையில், " கமிலே காட்சிப்படுத்தப்பட்ட நிறைவின் போது, பியாற்சா கிரான்டே கரவொலி எழுப்பாது அமைதியாக இருந்ததில் தான் அதிர்ச்சியும், கவலையும் கொண்டிருந்ததாகவும், ஆனால் வெற்றிப்படமாக அதனை மக்கள் தெரிவு செய்திருப்பதை அறியும்போதுதான், அத்திரைப்படம் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்ததை உணர முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இயக்குனர் Boris Lojkine

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது.  ஆபிரிக்க கண்டத்தின் ஒரு குட்டித் தீவான Cape Verdeans இலிருது போர்த்துக்கல் நோக்கி இடம்பெயர்ந்த ஆபிரிக்க இனத்தவர்களின் நலிந்த வாழ்க்கையை ஒட்டிய கதை இது. இருண்ட உலகில்,மிகச்சிறிய பழமையான மாடிக் கட்டிடங்களில் வாழும் இம்மக்கள் மிக வறியவர்கள். கூலி வேலை செய்பவர்கள். Cape Verdeans இலிருந்து தனது மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென புறப்படும் கணவன்.  பல வருடங்கள் கழித்து அவன் ஒரு நாள் இறந்துவிட அவனைத் தேடி அத்தீவிலிருந்து வரும் மனைவி அவன் வாழும் வீடு, அவன் சுற்றி வாழும் சமூகம் அனைத்தும் எவ்வளவு இருள்மையானது, வறியது என அடையாளம் கண்டுகொள்வதே படம். கதைக்கு ஏற்றது போல் படம் முழுவதும் இரவில் படமாக்கப்பட்ட காட்சிகளே நீள்கின்றன. அதற்கேற்றவகையில் சூழல் இசையே சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நடிகை Vitalina Varela

இது ஒரு உண்மைக் கதை. Vitalina Varela எனும் பெண்ணின் நிஜ வாழ்க்கை சம்பவங்களே படமாக்கப்பட்டுள்ளன. அவளே படத்தில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். Dark Film எனச் சொல்லக் கூடிய, வாழ்க்க்கையின் கரும்பக்கங்களை காண்பிக்க இத்திரைப்படத்திற்கு உதவி செய்திருப்பது படத்தின் கமெரா மற்றும் ஒலி விம்பங்கள். அவற்றின் துல்லியமான, ஓவியம் போன்ற வெளிச்சக் கதிர்களினாலேயே, இவ்வளவு இருமையான கதையினும் பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க முடிகிறது. 25 வருடங்கள் பயணித்த திரைக்கதை இது. அல்லது இரு மணித்தியாலங்கள் பயணிக்கும் திரைக்கதை இது எனவும் நீஙக்ள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இத்திரைப்படத்திற்கான அங்கீகாரம் அக்குடும்பங்களுக்கு மிகப்பெரிய அடையாளம்.

பிரதான கதாபாத்திரங்கள் இருவர், அவ்வப்போது துணைக்கதாபாத்திரங்கள் ஒரு நான்கைந்து பேர் என இவ்வளவு பேரை மாத்திரமே கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், தங்கச் சிறுத்தை விருதை வென்றிருக்கிறது.

இயக்குனர் Pedro Costa

இது எமது படத்தை மேலும் சில இடங்களுக்கு கொண்டு செல்ல எமக்கு கிடைத்த அங்கீகாரம் என்கின்றனர் இயக்குனர் குழு.  இத்திரைப்படத்தில் நடித்த Varela எனும் பெண்மணிக்கே, பெண்மையை பிரைதிநிதித்துவப்படுத்தும் சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதும் கிடைத்தது. பரிசு பெற்ற பின்னர் திரைப்பட விழாக் குழுவினர் அவருடன் மேற்கொண்ட பேட்டியில், கண்கலங்குகிறார் Vitalina. இயக்குனர் Pedro Costa  தான் இதற்கெல்லாம் காரணம். கணவனை இழந்து, யாருமே இல்லாது, தனித்து போர்த்துக்கல் வீதியில் நிர்க்கதியாக நின்றுகொண்டிருந்த போது கை கொடுத்தது அவரும், அவர் துணைவியாரும். படத்தில் காணும் காட்சிகள் அனைத்தும் மிகப்பெரும் உழைப்பில் கிடைத்ததது. படத்தின் பின்னால் இருக்கும் வேலை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நான் மட்டுமே விழாவுக்கு வந்திருக்கின்றேன். ஆனால் என்னால் இக்கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என பெரிதும் ஊக்கப்படுத்தியது பல பேர். என்னை விட இளையவர்களும், அடங்குவர். என்னை விட மூத்தவர்களும் அடங்குவர். இது பேரின் அன்பு, அக்கறை, விடா முயற்சியில் உருவான திரைப்படம் என்கிறார் அவர்.

இயக்குனர் Bamum Nafi

இயக்குனர் ஒருவரின் முதலாவது அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்பட போட்டிப் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதையும், Swatch First Feature விருதையும் ஒருங்கே பெற்றுக் கொண்டது Bamum Nafi (Nafi’s Father) எனும் திரைப்படம். செனகல் நாட்டைச் சேர்ந்த இத்திரைப்படத்தை Mamadou Dia இயக்கியிருந்தார். "அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடம் ஆயிரம் கதை சொல்லவிருக்கிறது" என பரிசு பெற்ற தருணம் கூறிய Mamadu Dia செனகலில் பிறந்து வளர்ந்தவர்.

செனகலின் இரண்டு சகோதரர்களை பற்றிய கதை இது. ஒருவர் ஒரு கிராமத்தின் இமாம். மற்றையவர் தீவிர மதவெறியர். இருவரும் தமது பிள்ளைகளின் திருமணம் குறித்து முரண்படுகின்றனர். எந்தவொரு குடும்பத்திலும் நடக்கக் கூடியது இக்கதை. இதுவும் மனிதாபிமானம் எது, எங்கிருந்து எப்படி உருவாகிறது, அல்லது எங்கில்லாமல் போகிறது, என்ன காரணம் என அலசும் திரைப்படம். சினிமாவில் சொல்லப்பட வேண்டிய இன்னுமொரு கதை.

குறுந்திரைப்பட போட்டிப் பிரிவில், சிறந்த சர்வதேச குறுந்திரைப்பட விருதை துருக்கிய இயக்குனர் Arda Ciltepe இயக்கிய Black Son எனும் திரைப்படம் பெற்றுக் கொண்டது. சிறந்த சுவிற்சர்லாந்து குறுந்திரைப்படமாக Mama Rosa எனும் திரைப்படம் வெற்றி பெற்றது. சுவிற்சர்லாந்தில் தனித்து வாழும் ஒரு குரோஷிய பெண்மணி பற்றிய திரைக்கதை இது.

இம்முறை முழு நீளத் திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குனருக்கான விருதை Les Enfants D’Isadora எனும் திரைப்படத்திற்கான Damien Manivel பெற்றுக் கொண்டார். இந்தோனேசிய திரைப்படமான The Science of Fictions, நடுவர் குழுவின் சிறப்பு பரிந்துரை விருதை பெற்றுக் கொண்டது.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில் பெரும்பாலான விருதுகளை அள்ளிச்சென்ற திரைப்படங்கள், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார சிக்கல்களை எடுத்துச் சொல்லும், சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களாகும். லொகார்னோ திரைப்பட விழாவின் இத்தனித்துவைத்தை புதிய கலை இயக்குனர் Lili Hunstan இன் வருகையும், மேலும் வலுப்படுத்தியுள்ளது.

 

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள் 

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்